Tuesday, September 2, 2014

பெற்றரி (Battery) இல்லாமல் இயங்கும் புதிய பேஸ் மேக்கர் கருவி கண்டுபிடிப்பு


பெற்றரி (Battery) இல்லாமல் இயங்கும்
புதிய பேஸ் மேக்கர் கருவி கண்டுபிடிப்பு

பெற்றரி இல்லாமல் இதய துடிப்பு மூலம் இயங்கும் புதிய பேஸ் மேக்கர் கருவி தயாரிக்கப்பட்டுள்ளது. இருதய துடிப்பு குறைபாடு உள்ளவர்களுக்கு பேஸ் மேக்கர் கருவி பொருத்தப்படுகிறது. பெற்றரி மூலம் இயங்கும் இக்கருவியை ஆபரேசன் மூலம் இருதயத்துக்குள் பொருத்துகின்றனர்.
பேஸ் மேக்கர் கருவியில் கோளாறு ஏற்பட்டாலோ அல்லது பெற்றரி மாற்ற வேண்டி இருந்தாலோ ஆப்ரேசன் மூலம் வெளியே எடுத்து சரி செய்து பொருத்த வேண்டியுள்ளது. இதனால் உடல் நலத்தில் ஆபத்தும், பிரச்சினைகளும் ஏற்படுகின்றன. அதை தடுக்க தற்போது புதுவித பேஸ் மேக்கர் கருவி தயாரிக்கப்பட்டுள்ளது.

இது பெற்றரி இன்றி ஆட்டோ மேடிக் முறையில் செயல்படும் விதமாக வடிவமைக்கப்பட்டுள்ளது. அதாவது தானாக இயங்க கூடியது. தானியங்கி கை கடிகாரம் தொழில் நுட்பத்தை முன்னோடியாக கொண்டு இது தயாரிக்கப்பட்டுள்ளது.

No comments:

Post a Comment