Tuesday, September 2, 2014

அரசில் அங்கம் வகிக்கும் அமைச்சர்களான ரவூப் ஹக்கீம்+றிஷாத் பதியுதீன் = அரசியல் நோக்கத்திற்காக ஒரே மேடையில் கட்டிப்பிடி வைத்தியம் பற்றி கருத்துக்கள் பரிமாறல் செய்யப்படுகின்றதா மக்கள் கேள்வி

அரசில் அங்கம் வகிக்கும் அமைச்சர்களான ரவூப் ஹக்கீம்+றிஷாத் பதியுதீன் = 

அரசியல் நோக்கத்திற்காக ஒரே மேடையில்

கட்டிப்பிடி வைத்தியம் பற்றி  கருத்துக்கள் பரிமாறல் செய்யப்படுகின்றதா

மக்கள் கேள்வி



நடைபெறவுள்ள ஊவா மாகாண சபை தேர்தலில் அனைவரும் ஒன்றிணைந்து அரசுக்கு அதிர்ச்சி வைத்தியம் கொடுக்க வேண்டும் எனஅரசாங்கத்தில் அங்கம் வகிக்கும் அமைச்சரும்  முஸ்லிம் காங்கிரஸ் தேசிய தலைவருமான  ரவூப் ஹக்கீம் கோரிக்கை விடுத்துள்ளார்.
அரசாங்கம் சார்பில் எந்தவொரு முஸ்லிம் வேட்பாளர்களும் களமிறக்கப்படாமையானது ஊவா வாழ் முஸ்லிம்களை புறந்தள்ளியிருப்பதை தெட்டத் தெளிவாக வெளிப்படுத்தியுள்ளது.
இந்நாட்டில் அனைத்து இன மக்களும் பலஸ்தீனத்துக்கு ஆதரவு வழங்கி வரும் நிலையில் பொதுபலசேனா மாத்திரம் இஸ்ரேலுக்கு ஆதரவாக ஊர்வலம் செல்கிறது. இவற்றுக்கு ஆதரவு வழங்குவது யார் என்பது எமக்கு தெரியும். இவ்வாறான நிலையில் எவ்வாறு முஸ்லிம்கள் ஆளும் ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்புக்கு ஆதரவு வழங்குவார்கள் என்றும் கேள்வி எழுப்பியுள்ளார்.

அரசாங்கத்திற்கு மக்கள் அதிர்ச்சி வைத்தியம் கொடுத்தாலும் 

அரசாங்கத்தோடு கட்டிப்பிடி வைத்தியம் செய்து கொண்டிருப்பவர்கள் 

இருக்கும் போது மக்கள் பாடு திண்டாட்டம்தான் இப்படி மக்கள் 

கூறுவதற்கு அமைச்சர் என்ன பதில் சொல்லப்போகின்றார்?

No comments:

Post a Comment