Friday, September 26, 2014

இந்திய பிரதித் தூதுவருடன் அமைச்சர் ஹக்கீம் சந்திப்பு


இந்திய பிரதித் தூதுவருடன் 

அமைச்சர் ஹக்கீம் சந்திப்பு

இந்திய பிரதித் தூதுவராக அண்மையில் கடமைகளைப் பொறுப்பேற்றுள்ள அரிந்தம் பக்ஷி நீதியமைச்சரும் ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவருமான ரவூப் ஹக்கீமை இன்று (26.09.2014) முற்பகல் நீதியமைச்சில் சந்தித்து கலந்துரையாடினார்.

இதன்போது இரு தரப்பினரும் இரு நாடுகளுக்கடையிலான உறவுகள் பற்றிய முக்கிய விடயம் குறித்தும் பேசினர். இச்சந்திப்பில் அமைச்சரின் இணைப்புச் செயலாளர் றஹ்மத் மன்சூரும் கலந்து கொண்டிருந்தார்.


No comments:

Post a Comment