Friday, September 26, 2014

ஓய்வுபெற்ற கல்விமானும் சிரேஸ்ட ஊடகவியலாளருமான அலியார் முஸம்மில் காலமானார்.



ஓய்வுபெற்ற கல்விமானும் சிரேஸ்ட ஊடகவியலாளருமான

அலியார் முஸம்மில்  காலமானார்.


சாயந்தமருது 16 அஹமட் வீதியைச் சேரந்த ஓய்வு பெற்ற சிங்கள பாட ஆசிரிய ஆலோசகர் கலாபூஷணம்அலியார் முஸம்மில்  மரைக்காயர்        ( முஸம்மில் மஹத்தயா ) இன்று கொழும்பில் காலமானார் . இன்னாலில்லாஹி வஇன்னா இலைஹி ராஜஊன்
1942.11.18 ஆம் திகதி பிறந்த இவர் கல்முனை ஸாஹிறா தேசியக் கல்லூரியின் முன்னாள் ஆசிரியரும் , மாளிகைக்காடு சபீனா முஸ்லிம் வித்தியாலய முன்னாள் அதிபரும் , ஓய்வுபெற்ற  கல்முனை வலய சிங்கள பாட ஆசிரிய ஆலோசகரும் , சாய்ந்தமருது மத்தியஸ்தர் சபையின் முன்னாள் தவிசாளரும், சாய்ந்தமருது ஜும்ஆப் பள்ளிவாசல் நம்பிக்கையாளரும், சாய்ந்தமருது பிரதேச அரச ஓய்வுதியர் சங்கத்தின் முன்னாள் தலைவரும் , சமூக சேவையாளரும் , கவிஞரும் , எழுத்தாளரும் , மொழிபெயர்ப்பாளரும் பிரபல ஊடகவியலாளருமாவார்.
அலியார் முஸம்மில் இம்முறை தனது மனைவியுடன் ஹஜ் கடமைக்காக புனித மக்கா செல்வதற்காக கொழும்பில் தங்கியிருந்த வேளையில் திடீரென சுவவீனமுற்று தனியார் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் காலமானார்.
அன்னாருக்கு ஜன்னதுல் பிர்தௌஸ் எனும் சுவர்க்கம் கிடைக்க
எல்லாம் வல்ல இறைவனை பிராத்திப்போமாக

No comments:

Post a Comment