Saturday, September 27, 2014

சொத்துக் குவிப்பு வழக்கு: ஜெயலலிதா குற்றவாளி என்று தீர்ப்பு


சொத்துக் குவிப்பு வழக்கு:
ஜெயலலிதா குற்றவாளி என்று தீர்ப்பு

சொத்துக் குவிப்பு வழக்கில் பெங்களூர் பரப்பன அக்ரஹார பகுதியில் நீதிமன்றத்தில் இன்று காலை நீதிபதிகள் தமிழக முதல்வர் ஜெயலலிதா உள்ளிட்டவர்கள் குற்றவாளிகள் என்று தீர்ப்பு அளித்ததாக அங்கிருந்து வரும் தகவல்கள் தெரிவிக்கின்றன. இது குறித்து பிடிஐ செய்தியும் உறுதிப் படுத்தியது.

இந்நிலையில், அவருக்கு 4 வருட சிறைத் தண்டனையும் ரூ.25 ஆயிரம் அபராதம் விதிக்கப்பட்டதாகவும் கூறப்பட்டது. ஆனால், 3 மணிக்குதான் தண்டனை விவரம் முழுமையாக வெளியாகும் என்று கூறப்படுகிறது.

No comments:

Post a Comment