Friday, September 26, 2014

மனித உரிமைகள் கண்காணிப்பகம் இலங்கையிடம் மீண்டும் கோரிக்கை


மனித உரிமைகள் அலுவலகத்தின் நடவடிக்கைகளுக்குஒத்துழைப்பு 

வழங்குவது குறித்து மீண்டும் ஒருமுறை சிந்திக்க வேண்டும்

மனித உரிமைகள் கண்காணிப்பகம்

இலங்கையிடம் மீண்டும் கோரிக்கை


இலங்கை அரசாங்கம் ஐக்கிய நாடுகளின் மனித உரிமைகள் அலுவலகத்தின் நடவடிக்கைகளுக்கு ஒத்துழைப்பு வழங்குவது குறித்து மீண்டும் ஒருமுறை சிந்திக்க வேண்டும் என்று மனித உரிமைகள் கண்காணிப்பகம் கோரிக்கை விடுத்துள்ளது.
இலங்கை தொடர்பில் ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் ஆணையாளரின் வாய்மூல அறிக்கையை மனித உரிமைகள் கண்காணிப்பகம் வரவேற்றுள்ளது. எனினும் ஐக்கிய நாடுகள் சபையின் பக்கசார்பற்ற விசாரணைக்கு ஒத்துழைக்கப் போவதில்லை என்று இலங்கையின் அதிகாரிகள் வெளியிட்ட கருத்துக்கள் குறித்து கண்காணிப்பகம் வருத்தம் வெளியிட்டுள்ளது.

சர்வதேச விசாரணையாளர்கள் மேற்கொள்ளும் விசாரணைகளின் போது சாட்சியமளிப்பவர்களை தடுக்கும் மற்றும் மனித உரிமை காப்பாளர்களை அச்சுறுத்தும் நடவடிக்கைகளையும் கண்காணிப்பகம் கண்டித்துள்ளது இவ்வாறானவர்கள் துரோகிகள் என்று அழைக்கப்பட்டு அவர்கள் மீது தொந்தரவுகளும் மேற்கொள்ளப்படுகின்றன. போரில் இறந்தவர்களுக்கு மரியாதை செலுத்தவும் தேசிய கீதத்தை தமிழில் இசைப்பதற்கும் அரசாங்கம் அனுமதி மறுத்து வருகிறது. அதேநேரம் மததலங்கள் மீதும் சிறுபான்மையினர் மீதும் நடத்தப்படும் தாக்குதல்களை கண்காணிப்பகம் கண்டித்துள்ளது. இந்தநிலையிலும் ஐக்கிய நாடுகளின் மனித உரிமைகள் அலுவலகம் இலங்கையின் மனித உரிமை நிலவரம் குறித்து கண்காணிப்புக்களை மேற்கொண்டு வருகிறது. எனவே இலங்கை அரசாங்கம் ஐக்கிய நாடுகளின் மனித உரிமைகள் அலுவலகத்தின் நடவடிக்கைகளுக்கு ஒத்துழைப்பு வழங்குவது குறித்து மீண்டும் ஒருமுறை சிந்திக்க வேண்டும் என்று மனித உரிமைகள் கண்காணிப்பகம் கோரிக்கை விடுத்துள்ளது. 

No comments:

Post a Comment