Thursday, September 25, 2014

அமெரிக்க ஜனாதிபதி ஒபாமாவின் வரவேற்பு நிகழ்வில் ஜனாதிபதி ராஜபக்‌ஷவும், முதற்பெண்மணியும் பங்கேற்பு


அமெரிக்க ஜனாதிபதி ஒபாமாவின் வரவேற்பு நிகழ்வில்
ஜனாதிபதி ராஜபக்‌ஷவும், முதற்பெண்மணியும் பங்கேற்பு

ஜனாதிபதி மஹிந்த ராஜபக், முதற்பெண்மணி ஷிராந்தி விக்கிரமசிங்க ராஜபக் இருவரும் ஐக்கிய அமெரிக்க ஜனாதிபதி பராக் ஒபாமா, முதற்பெண்மணி மிச்செல் ஒபாமா இருவராலும் வழங்கப்பட்ட வரவேற்பு நிகழ்வில் செவ்வாய்க்கிழமை (செப். 23) மாலை நியூயோர்க் நகரில் பங்கேற்றனர்.
இந்த வரவேற்பு நிகழ்வானது ஐக்கிய நாடுகள் பொதுச்சபைக்கு விஜயம் மேற்கொள்ளும் நாடுகளின், அரசாங்கங்களின் தலைவர்களுக்காக வருடந்தோறும் இடம்பெறும் நிகழ்வு ஆகும்.

.நா காலநிலை உச்சிமாநாடு 2014, கிளின்ரன் பூகோள முனைப்பின் வருடாந்தச் சந்திப்பு, .நா பொதுச்சபையின் 69வது அமர்வு உட்பட இவ்வாரம் இடம்பெறவுள்ள பல்வேறு நிகழ்வுகளில் கலந்துகொள்வதற்காக ஜனாதிபதி ராஜபக் கடந்த திங்கட்கிழமை (செப். 22) நியூயோர்க்கை சென்றடைந்தார்.
(புகைப்படம்: வெள்ளைமாளிகை உத்தியோகபூர்வ படப்பிடிப்பாளர்)

No comments:

Post a Comment