Thursday, September 25, 2014

உடலினுள் வைத்து தங்கம் கடத்தியவர் கைது செய்யப்பட்டார்


உடலினுள் வைத்து தங்கம் கடத்தியவர்
கைது செய்யப்பட்டார்


சிங்கப்பூரில் இருந்து உடலினுள் தங்க தகடுகளை மறைத்து இலங்கைக்கு கடத்திவந்த ஒருவர் கட்டுநாயக்க விமான நிலையத்தில் வைத்து இன்று கைது செய்யப்பட்டுள்ளார்.
குறித்த நபர் சுமார் 45 லட்சம் ரூபா பெறுமதியான 9 தங்க தகடுகளை மலவாயிலில் மறைத்து வைத்து கொண்டுவந்ததாக விமான நிலைய சுங்கப் பிரிவு தெரிவித்துள்ளது.

900 கிராம் தங்கத் தகடுகள் குறித்த நபரிடம் இருந்து மீட்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கும் விமான நிலைய சுங்கப் பிரிவினர் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருவதாகவும் அறிவிக்கப்படுகின்றது.

No comments:

Post a Comment