Thursday, November 27, 2014

”அபே ஜாதிக பெரமுன” தேர்தல் விஞ்ஞாபனம் டிசம்பர் 10 இல்


”அபே ஜாதிக பெரமுன”

தேர்தல் விஞ்ஞாபனம் டிசம்பர் 10 இல்



பொது எதிரணியின் தேர்தல் விஞ்ஞாபனம்  எதிர்வரும் டிசம்பர்  10 ஆம் திகதி வெளியிடப்படவுள்ளதாக அறிவிக்கப்படுகின்றது.    இத்தேர்தல் விஞ்ஞாபனத்தில்  பொதுவேட்பாளரான மைத்திரிபால சிறிசேன மற்றும் எதிர்க்கட்சித் தலைவர் ரணில் விக்கிரமசிங்க ஆகியோர் கைச்சாத்திடுவர். என முன்னாள் அமைச்சர் ராஜித சேனாரத்ன தெரிவித்துள்ளார்.    
இது குறித்து ராஜித சேனாரத்ன மேலும் தெரிவித்திருப்பதாவது,    "நிறைவேற்று அதிகார ஜனாதிபதி முறைமையை இல்லாதொழித்தல், நாடாளுமன்றத்துக்குப் பொறுப்புக் கூறும் ஆட்சிமுறையை உருவாக்குதல், தேர்தல் முறைகளில் மாற்றம் ஏற்படுத்தல் என்பன உள்ளிட்ட மேலும் பல முக்கிய விடயங்கள் இந்தத் தேர்தல் விஞ்ஞாபனத்தில் உள்ளடக்கப்பட்டுள்ளன.   

நாடாளுமன்றத்துக்குப் பொறுப்புக்கூறும் அமைச்சரவையையும், அமைச்சரவைக்குப் பொறுப்புக்கூறும் பிரதமரையும் உருவாக்குவதுடன், அமைச்சரவையின் பிரதானியாக பிரதமர் செயற்படுவார். இதனூடாக புதிய அரசியல் கலாசாரமொன்றை உருவாக்கவுள்ளோம்" – என்று தெரிவித்துள்ளார்.  

No comments:

Post a Comment