Thursday, November 27, 2014

ஐ.நா. குழு விசாரணை நடத்த இலங்கை அனுமதிக்கவில்லை எனில் இலங்கையுடன் வர்த்தக உறவை துண்டித்து கொள்ளுமாறு ஐரோப்பிய யூனியனுக்கு இங்கிலாந்து வலியுறுத்தல்

  ஐ.நா. குழு விசாரணை நடத்த இலங்கை அனுமதிக்கவில்லை எனில்

இலங்கையுடன் வர்த்தக உறவை 

துண்டித்து கொள்ளுமாறு

ஐரோப்பிய யூனியனுக்கு இங்கிலாந்து வலியுறுத்தல்


.நா. குழு விசாரணை நடத்த இலங்கை அனுமதிக்கவில்லை என்றால் அந்நாட்டுடனான வார்த்தக உறவை துண்டித்து கொள்ளுமாறு ஐரோப்பிய யூனியனை இங்கிலாந்து கேட்டுக் கொண்டுள்ளது.
இலங்கையில் உள்நாட்டு போரின் போது நடைபெற்ற மனித உரிமைகள் மீறல்கள் குறித்து சர்வதேச விசாரணை நடத்துவது என்று ஜெனிவாவில் நடைபெற்ற ஐக்கிய நாடுகள் சபை மாநாட்டில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. இது குறித்து விசாரிக்க 3 பேர் கொண்ட குழுவை .நா. அமைத்தது.
இந்த விசாரணையை ஏற்க முடியாது என்று இலங்கை அரசு உறுதியாக தெரிவித்து  விட்டது. விசாரணை குழுவுக்கு ஒத்துழைப்பு தர இயலாது என்றும், குழுவை இலங்கைக்குள் அனுமதிக்க முடியாது என்றும் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஸ திட்டவட்டமாக கூறிவிட்டார்.

இந்நிலையில் இங்கிலாந்து நாட்டின் வெளியுறவு விவகாரங்களுக்கான குழு .நா. விசாரணை குழுவை அனுமதிக்க தொடர்ந்து மறுப்பு தெரிவித்தால் அந்நாட்டு உடனான வர்த்தக உறவை துண்டித்து கொள்ளுமாறு ஐரோப்பிய யூனியனை அறிவுறுத்தியுள்ளது. வர்த்தக உறவை ஐரோப்பிய யூனியன் நாடுகள் துண்டித்துவிட்டால் இலங்கைக்கு பெரும் பொருளாதார இழப்பு ஏற்படும் என்று இங்கிலாந்து தெரிவித்துள்ளது

No comments:

Post a Comment