Saturday, November 29, 2014

பிலிப் ஹியூஸ் இறுதிச் சடங்கு டிசம்பர் 3ஆம் திகதி சொந்த ஊரில்


பிலிப் ஹியூஸ் இறுதிச் சடங்கு
டிசம்பர் 3ஆம் திகதி சொந்த ஊரில்



கிரிக்கெட் விளையாட்டின் போது பந்து தாக்கி சிகிச்சை பலனின்றி உயிரிழந்த ஆஸ்திரேலிய வீரர் பிலிப் ஹியூஸின் இறுதிச் சடங்குகள் அவரது சொந்த ஊரில் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டிருக்கிறது.
ஆஸ்திரேலியாவின் முதல் தர போட்டியில் பவுன்சர் பந்து தலையில் தாக்கி கோமா நிலையில் சிகிச்சை பெற்று வந்த பிலிப் ஹியூஸ் கடந்த வியாழக்கிழமை உயிரிழந்தார்.

அவரது இறுதிச் சடங்குகள் ஹியூஸின் சொந்த ஊரான மேக்ஸ்விலியில் டிசம்பர் 3ஆம் திகதி நடத்த அவரது குடும்பத்தினர் திட்டமிட்டுள்ளனர்.

No comments:

Post a Comment