Saturday, November 29, 2014

கிரிக்கெட் பேட்டின் மீது தொப்பியை வைத்து நெகிழ்ச்சியான அஞ்சலி



கிரிக்கெட் பேட்டின் மீது தொப்பியை வைத்து
பிலிப் ஹியூஸிற்கு கிரிக்கெட் ரசிகர்கள்

நெகிழ்ச்சியான அஞ்சலி


ஆஸ்திரேலியாவில் நடைபெற்ற முதல்தர போட்டியில் பவுன்ஸர் பந்தால் தலையில் பலத்த காயமடைந்த இளம் வீரர் பிலிப் ஹியூஸ் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார் அல்லவா?. அவரின் எதிர்பாராத  மரணம் கிரிக்கெட் உலகை உலுக்கியுள்ளது.
பந்து தாக்கி உயிரிழந்த பிலிப் ஹியூஸிற்கு கிரிக்கெட் ரசிகர்கள் டிவிட்டரில் நெகிழ்ச்சியான அஞ்சலி செலுத்தி வருகின்றனர். கிரிக்கெட் பேட்டின் மீது தொப்பியை வைத்து எடுக்கப்பட்ட புகைப்படங்களை அவர்கள் டிவிட்டரில் தங்கள் இரங்கல் செய்தியுடன் பகிர்ந்து கொண்டு வருகின்றனர். வீடுகள், தோட்டம் , கடைகள் எல பலவகையான இடங்களுக்கு முன் சாய்வாக வைக்கப்பட்ட கிரிக்கெட் பேட் மீது கிரிக்கெட் தொப்பி வைக்கப்பட்ட புகைப்படங்கள் சொல்லாத சோகத்தை உணர்த்துகின்றன. கிரிக்கெட் ரசிகர்கள் மட்டும் அல்லாமல் ஆஸ்திரேலிய வீரர்கள் உள்ளிட்டோரும் இப்படி புகைப்பட அஞ்சலி செலுத்தி வருகின்றனர்.

இந்த கிரிகெட் அஞ்சலியை ஆஸ்திரேலியாவை சேர்ந்த பால்.டி.டெய்லர் எனும் டிவிட்டர் பயனாளி முதலில் துவக்கி வைத்ததாக கருதப்படுகிறது. தீவிர கிரிக்கெட் ரசிகரான டெய்லர், தனது வீட்டு கதவு முன் கிரிக்கெட் பேட்டை சாய்த்து வைத்து அதன் மீது தொப்பியை வைத்து அஞ்சலி செலுத்தும் புகைப்படத்தை எடுத்து தனது டிவிட்டர் பக்கத்தில், (@Squizabilly ) பகிர்ந்து கொண்டார். மறைந்த வீரருக்கு அஞ்சலி செலுத்தும் ஹாஷ்டேகுடன்#putoutyourbats எனும் ஹாஷ்டேகையும் அவர் வெளியிட்டிருந்தார். இதை பார்த்து நெகிழ்ந்த பலரும் இதே முறையில் புகைப்படம் எடுத்து டிவிட்டரில் இதே ஹாஷ்டேகுடன் பகிர்ந்து கொண்டனர். இந்த புகைப்படங்களும் அதனுடன் ரசிகர்கள் பகிரும் செய்திகளும் நெகிழ வைக்கின்றன.

No comments:

Post a Comment