Saturday, December 6, 2014

ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஸ 9 ஆம் திகதி திருப்பதி செல்கின்றார்

ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஸ
9 ஆம் திகதி திருப்பதி செல்கின்றார்

ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஸ  டிசம்பர் 9-ஆம் திகதி திருப்பதி வெங்கடாசலபதி ஆலயத்தில் தரிசனம் செய்ய செல்கிகிறார் என அறிவிக்கப்படுகின்றது.
ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஸவை  திருப்பதி வர அனுமதிக்கக் கூடாது என பாமக நிறுவனர் டாக்டர் ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார்.
அமெரிக்கா, இங்கிலாந்து, கனடா என தமிழர்கள் அதிகம் வாழக்கூடிய நாடுகளில் சுதந்திரமாக நடமாட முடியாத மஹிந்த ராஜபக்ஸ, நினைத்தபோதெல்லாம் இந்தியா வந்துசெல்ல மத்திய அரசு அனுமதிப்பது சரியல்ல. எனவே, அவர் திருப்பதி வர அனுமதிக்கக் கூடாது என பாமக நிறுவனர் டாக்டர் ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார்

இதேவேளை, திருப்பதி வெங்கடாசலபதி ஆலயத்துக்கு வருகை தரும் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஸவைக் கண்டித்து மதிமுக சார்பில் திருப்பதியில் டிசம்பர் 9-ஆம் திகதி கறுப்புக் கொடி ஆர்ப்பாட்டம் நடைபெறும் என அக்கட்சியின் பொதுச்செயலாளர் வைகோ தெரிவித்துள்ளார்.

No comments:

Post a Comment