Saturday, December 6, 2014

பொதுவேட்பாளர் மைத்திரிபால சிறிசேனவுக்கு சிராணி பண்டாரநாயக்கவும் ஆதரவு?

பொதுவேட்பாளர் மைத்திரிபால சிறிசேனவுக்கு
சிராணி பண்டாரநாயக்கவும் ஆதரவு?

எதிர்வரும் ஜனாதிபதி தேர்தலில் பொது வேட்பாளராக போட்டியிடவுள்ள மைத்திரிபால சிறிசேனவுக்கு முன்னாள் பிரதம நீதியரசர் சிராணி பண்டாரநாயக்கவும் ஆதரவு வழங்கவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.  
பொது வேட்பாளர் மைத்திரிபால சிறிசேன தேர்தல் காலத்தில் முகம்கொடுக்கும் சட்டரீதியான பிரச்சினைகளுக்கு முன்னாள் பிரதம நீதியரசர் சிராணி பண்டாரநாயக்க சட்ட ஆலோசனை வழங்கவுள்ளார்.   அதற்கான பேச்சுவார்த்தைகளில் மைத்திரிபாலவுக்கு ஆதரவான தரப்பினர் ஈடுபட்டு வருவதாக தென்னிலங்கை ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன

No comments:

Post a Comment