Sunday, December 28, 2014

இது உங்கள் கவனத்துக்கு..!!

இது உங்கள் கவனத்துக்கு..!!

- ஏ.எச். சித்தீக் காரியப்பர்

இந்திய தேசத்து சுதந்திரம் தொடர்பில் இவ்வாறு அங்கு இன்றும் கூறப்படுகிறது. ” இரவில் வாங்கினோம் இன்னும் விடியவில்லைஎன்று.
அதேபோல் அண்மையில் ஒரு தகவலை இங்கு நான் படித்தேன்.. அதில் இவ்வாறு இருந்தது..” சாய்ந்தமருதுக்கான தனியான பிரதேச சபை இன்றிரவு வர்த்தமானியில் வெளியாகிறது என்று.. ஆனால் அந்த இரவு இன்னும் விடியவில்லையா?
மேலும் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் அரசுடன் இருப்பதால் சாய்ந்தமருதுக்கான தனியான பிரதேச சபையை வழங்குவது கஷ்டமான விடயம். அவர்கள் விடமாட்டார்கள் என்றெல்லாம் முன்பு கூறப்பட்டது. எனவே, இப்போது அந்தப் பிரச்சினை இல்லை. தேவையான ஏற்பாடுகளை உடனடியாகச் செய்து விடயத்தை கச்சிதமாக முடிக்கலாம் அல்லவா?
இரவு நேரத்தில் எதனையும் இனி இரகசியமாக வெளியிட தேவையில்லை.. பகல் பொழுதில் அரை நாளிலேயே அனைத்தையும் செய்து முடிக்கலாம் அல்லவா?

வேறேதும் காரணம் கூறவும் இனி வழியில்லை. பார்ப்போம்.... பொறுத்திருந்து பார்ப்போம்!

No comments:

Post a Comment