Sunday, December 28, 2014

அடுத்த மகா தவறை அரங்கேற்றி உள்ளதாம் முஸ்லிம் காங்கிரஸ் - குற்றம் சாட்டுகிறார் சேகு இஸ்ஸதீன்

அடுத்த மகா தவறை அரங்கேற்றி உள்ளதாம்
முஸ்லிம் காங்கிரஸ்
குற்றம் சாட்டுகிறார் சேகு இஸ்ஸதீன்


அடுத்த மகா தவறை அரங்கேற்றி உள்ளது முஸ்லிம் காங்கிரஸ் இவ்வாறு குற்றம் சாட்டுகிறார் முன்னாள் பிரதி அமைச்சரும் முஸ்லிம் காங்கிரஸின் ஸ்தாபக தவிசாளருமான  சேகு இஸ்ஸதீன் ...
அரசில் இருந்து முஸ்லிம் காங்கிரஸின்  வெளியேற்றம் தொடர்பில் அவரின் கைப்பட எழுதி ஊடகங்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ள அறிக்கையிலேயே அவர் இவ்வாறு குற்றம் சாட்டியிருக்கிறார் ,
இதுகுறித்து சேகு இஸ்ஸதீன் தனது அறிக்கையில் தெரிவித்திருப்பதாவது,
சிங்கள பிரதேசங்களில் சிதறுண்டு வாழும் சகோதர முஸ்லிம்களின் சமாதான வாழ்வையும் பாதுகாப்பையும் சந்தியில் நிறுத்தி- பொது சிங்கள மக்களின் முஸ்லிம்கள் தொடர்பான அனுதாப உணர்வுகளுக்கு ஆப்பு வைத்து அரசாங்கத்தின் நல்லெண்ண நாட்டங்களுக்கு வேட்டு வைத்து சிங்கள - முஸ்லிம் கலவரங்களால் சீற்றம் அடைந்துள்ள வடக்கு - கிழக்கு முஸ்லிம்களின் வடிகான் தேடிய இன-மத உணர்வுகளை இதமாக நெறிப்படுத்தும் எந்த முயற்சியிலும் இறங்காமல் - அவற்றை தமது அடுத்த பாராளுமன்ற தேர்தலின் போது பகடைக் காய்களாக்கி தமது சுய அரசியல் பதவி முதலீடாக்கும் முனைப்போடு சமநிலை சமூகமான முஸ்லிம்களின் நாசுக்கான நாகரிக விழுமியங்களை நட்டாற்றில் தள்ளி ஜனாதிபதி தேர்தலை கேலிக்கிடமாக்கி உள்ளதன் மூலம் அடுத்த மகா தவறை முஸ்லிம் காங்கிரஸ் அரங்கேற்றி உள்ளது. இவ்வாறு ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸின் ஸ்தாபக தவிசாளரும் முன்னாள் பிரதி அமைச்சருமான சேகு இஸ்ஸதீன் அறிக்கையில் தெரிவித்துள்ளார் .



No comments:

Post a Comment