Sunday, December 28, 2014

பைசர் முஸ்தபா மைத்திரிபால சந்திப்பு ஆதரவு வழங்க தீர்மானித்துள்ளதாக தகவல்கள்

பைசர் முஸ்தபா மைத்திரிபால சந்திப்பு
ஆதரவு வழங்க தீர்மானித்துள்ளதாக தகவல்கள்



ஆளும் கட்சியின் பிரதி அமைச்சரான பைஸர் முஸ்தபா பொதுவேட்பாளர் மைத்திரிபால சிறிசேனவுடன் இணைந்து கொண்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.
 கடந்த 26 ஆம் திகதி சிங்கப்பூருக்கு பயணமாகியிருந்த  பைஸர் முஸ்தபா  நாடு திரும்பியதும் விசேட அறிவிப்பு ஒன்றினை விடுப்பார் என எதிர்பார்க்கப்பட்டது.
 இந்த நிலையில் சிங்கப்பூரிலிருந்து இன்று திங்கட்கிழமை அதிகாலை நாடுதிரும்பியதும்பொது எதிரணியின் ஜனாதிபதி வேட்பாளர் மைத்திரிபால சிறிசேனவை சந்தித்து கலந்துரையாடியுள்ளார் என அறிவிக்கப்படுகின்றது.

 அதில் ஆளும் கூட்டணியிலிருந்து விலகி நடைபெறப் போகும் ஜனாதிபதி தேர்தலில் எதிரணியின் பொதுவேட்பாளர் மைத்திரிபால சிறிசேனவுக்கு ஆதரவு வழங்க தீர்மானித்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

No comments:

Post a Comment