Monday, December 29, 2014

எயர்ஏசியா விமானத்தின் பாகங்கள் நங்கா தீவு அருகே கண்டுபிடிப்பு

எயர்ஏசியா விமானத்தின் பாகங்கள்
நங்கா தீவு அருகே கண்டுபிடிப்பு


காணாமல் போன ஏர் ஏசியா விமானத்தின் உதரி பாகங்கள் நங்கா தீவு அருகே கண்டுபிடிக்கப்பட்டுள்ளது என்று ஆஸ்திரேலிய விமான அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
இந்த விமானத்தில் பயணித்த 162 பேரும் பலியாகியுள்ளனர். அவர்களின் உடல்களை தேடும் பணி நடைபெற்றுவருவதாகவும் அறிவிக்கப்படுகின்றது..

இந்தோனேஷியாவின் சுரபாயா நகரில் இருந்து சிங்கப்பூருக்கு (நேற்று) ஞாயிற்றுக்கிழமையன்று 162 பேருடன் ஏர்ஏசியா விமானம் சென்றது. விமானம் புறப்பட்ட 42 நிமிடங்களில் விமானத்தின் கட்டுப்பாட்டு அறை தொடர்ப்பு துண்டிக்கப்பட்டது. இதனைத்தொடர்ந்து விமானம் காணாமல் போனதாக அதிகாரப்பூர்வமாக ஏர் ஏசியா அறிவித்தது. இதனைத்தொடர்ந்து விமானத்தை தேடும்பணி முடக்கிவிடப்பட்டது. இந்நிலையில் விமானத்தின் உடைந்த பாகங்கள் நங்கா தீவு அருகே கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாகத் தற்போது தெரிவிக்கப்பட்டுள்ளது.

No comments:

Post a Comment