Monday, December 29, 2014

நிஷாந்த முத்துஹெட்டிகம பிணையில் விடுதலை

நிஷாந்த முத்துஹெட்டிகம
பிணையில் விடுதலை

கட்டுநாயக்க விமான நிலையத்தில் கைதாகி விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்த பிரதி அமைச்சர் நிஷாந்த முத்துஹெட்டிகம பிணையில் விடுதலை செய்யப்பட்டுள்ளார்.    பத்தேகம நீதவான் நீதிமன்றில் இன்று ஆஜர் செய்யப்பட்ட பிரதி அமைச்சருக்கு பிணை வழங்கப்பட்டுள்ளது.  
வதுருவையில் இடம்பெறவிருந்த எதிரணியின் ஜனாதிபதி தேர்தல் பரப்புரைக் கூட்டத்துக்காக அமைக்கப்பட்டிருந்த மேடையை தாக்கி சேதப்படுத்தினர் என்ற சந்தேகத்தில் கைது செய்யப்பட்டு பொலிஸில் தடுத்துவைக்கப்படிருந்த மூவரை பொலிஸ் நிலையத்துக்குள் சென்று பலவந்தமாக அழைத்துசென்றார் என்று பிரதியமைச்சர்  மீது குற்றஞ்சாட்டப்பட்டிருந்தது.   
பத்தேகம பிரதேசத்துக்குட்பட்ட 8 பொலிஸ் பிரிவுகளுக்குள் நுழைவதற்கு பிரதியமைச்சர் முத்துஹெட்டிகமவுக்கு தடையுத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. அத்துடன், அவருடைய கடவுச் சீட்டையும் நீதிமன்றம் பொறுப்பெடுத்தது. இந்நிலையில், தலா ஐந்து இலட்சம் ரூபாய் பெறுமதியான இரண்டு சரீரப் பிணைகளில் செல்ல அவருக்கு அனுமதி வழங்கிய நீதவான், பொதுமக்கள் பிரதிநிதிகளாக உள்ளவர்கள் தொடர்பில் முழு உலகமும் அவதானமாக இருப்பதால் அனைவருக்கும் எடுத்துக்காட்டாக விளங்கும் வகையில் நடந்துகொள்ளுமாறு எச்சரிக்கை விடுத்தார். இதேவேளை, முத்துஹெட்டிகமவின் சாரதியான மெத்சிறி சாமிந்தவையும் ஒரு இலட்சம் ரூபாய் சரீரப் பிணையில் செல்ல நீதவான் அனுமதி வழங்கினார். நீதவானின் உத்தரவுக்கிணங்க, பத்தேகம, வந்துரம்ப, யக்கமுல்ல, உடுகம, நெலுவ, ஹினிதும, நாகொடை மற்றும் போத்தல ஆகிய பொலிஸ் பிரிவுகளுக்குள் முத்துஹெட்டிகம நுழைய முடியாது. 
இந்த நிலையில் அவருக்கு பாதுகாப்பு வழங்கிய அமைச்சு பாதுகாப்பு பிரிவைச்சேர்ந்த மூவர், பொலிஸாரினால் கைது செய்யப்பட்டு நீதிமன்றத்தின் உத்தரவின் பேரில் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது



No comments:

Post a Comment