Wednesday, February 4, 2015

கல்முனை ஸாஹிறா தேசிய பாடசாலையில் இரத்ததானம் வழங்கி சுதந்திர தினக் கொண்டாட்டம்


கல்முனை ஸாஹிறா தேசிய பாடசாலையில்
இரத்ததானம் வழங்கி சுதந்திர தினக் கொண்டாட்டம்

இலங்கையின் 67ஆவது சுதந்திரதின. நிகழ்வுகள் கல்முனை ஸாஹிறா தேசிய பாடசாலையில் இடம்பெற்றது.
இரண்டு சுற்றுக்களாக இடம்பெற்ற குறித்த நிகழ்வுகள் பாடசாலையின் அதிபர் பி.எம்.எம்.பதுர்தீன் தலைமையில் தேசிய கொடி ஏற்றிவைக்கப்பட்டதுடன் ஆரம்பிக்கப்பட்டன. இதன் பின்னர் பாடசாலைக் கொடி ஏற்றப்பட்டதுடன் புதிதாக தெரிவுசெய்யப்பட்டுள்ள ஜனாதிபதி மைத்திரிபால சிரிசேனவுக்காவும் நாட்டுக்காகவும் துஆ பிரார்த்தனையும் இடம்பெற்றது.
நிகழ்வின் இரண்டாவது சுற்றாக சொற்பொழிவும் இரத்ததான நிகழ்வும் இடம்பெற்றது. இந்நிகழ்வுக்கு கல்முனை ஸாஹிறா தேசிய பாடசாலையின் பழைய மாணவர் சங்கத்தின் பிரதித் தலைவர் சாய்ந்தமருது மாவட்ட வைத்திய சாலையின் வைத்திய அதிகாரி டாக்டர் என்.ஆரீப் தலைமை வகித்தார்.
இங்கு பாடசாலையின் அதிபர் பி.எம்.எம்.பதுர்தீன், கல்முனை பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரி  ஏ.டபிள்யூ.எம் கப்பார், சாய்ந்தமருது பிரதேச செயலாளர் .எல்.எம்.சலீம், சாய்ந்தமருது மாளிகைக்காடு பள்ளிவாசல்களின் தலைவர் வை.எம்.ஹனீபா, ஸாஹிறா தேசிய பாடசாலையின் பழைய மாணவர் சங்கத்தின் கொழும்புக் கிளையின் தலைவர் டாக்டர் சனுஸ் காரியப்பர், கல்முனை அஸ்ரப் ஞாபகார்த்த வைத்தியசாலையின் பதில் வைத்திய அதிகாரி டாக்டர் எம்.சீ.எம்.மாஹிர் உட்பட பல பிரமுகர்களும் பாடசாலையின் அபிவிருத்தி சங்க உறுப்பினர்களும் மாணவர்களும் பெரும் எண்ணிக்கையில் கலந்துகொண்டனர்.

இரத்ததான நிகழ்வு கல்முனை அஸ்ரப் ஞாபகார்த்த வைத்தியசாலையின் பதில் வைத்திய அதிகாரி டாக்டர் எம்.சீ.எம்.மாஹிரின் பங்குபற்றுதலுடன் டாக்டர் எம்.ரீ.என்.சிபாயா, டாக்டர் கே.டீ.டீ.நடீஜா என்பவர்களின் மேற்பார்வையில் இடம்பெற்றது.







No comments:

Post a Comment