Sunday, March 1, 2015

பாகிஸ்தான் அணி 20 ஓட்டங்களால் வெற்றி (புள்ளி விபரப்பட்டியல் இணைப்பு)


உலகக் கிண்ணக் கிரிக்கெட் போட்டி – 2015
பாகிஸ்தான் அணி 20 ஓட்டங்களால் வெற்றி

பிரிஸ்பேனில் நடைபெற்ற 23-வது லீக் ஆட்டத்தில் பாகிஸ்தான் அணி, ஜிம்பாப்வே அணியுடன் மோதியது. இதில் நாணயச் சுழற்சியில் வென்ற பாகிஸ்தான் அணி முதலில் பேட்டிங்  தெரிவு செய்தது. பாகிஸ்தான் 50 ஓவரில் 7 விக்கெட் இழந்து 235 ஓட்டங்கள் எடுத்தது. இதையடுத்து ஜிம்பாப்வே அணிக்கு 236 ஓட்டங்கள் வெற்றி இலக்காக நிர்ணயிக்கப்பட்டது. அணியில் அதிகபட்சமாக மிஸ்பா 73 ஓட்டங்களும்,வகாப் ரியாஸ் 54 ஓட்டங்களும் எடுத்தனர்.
இதையடுத்து 236 ஓட்டங்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களம் இறங்கிய ஜிம்பாப்வே அணி 49.4 ஓவர்களில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 215 ஓட்டங்கள் எடுத்தது. இதன் மூலம் 20 ஓட்டங்கள் வித்தியாசத்தில் பாகிஸ்தான் அணி வெற்றி பெற்றது.

இந்த உலகக் கிண்ணக் கிரிக்கெட் தொடரில் பாகிஸ்தான் அணி பெறும் முதல் வெற்றி இது என்பது குறிப்பிடத்தக்கது.





No comments:

Post a Comment