Monday, March 2, 2015

லண்டனில் ரூ. 46 ஆயிரத்திற்கு விற்பனை செய்யப்பட்ட வட்ட வடிவ அதிசய கோழி முட்டை!

லண்டனில் ரூ. 46 ஆயிரத்திற்கு விற்பனை செய்யப்பட்ட
வட்ட வடிவ அதிசய கோழி முட்டை!

வட்ட வடிவ அதிசய கோழி முட்டை  ரூ.46 ஆயிரத்திற்கு விற்பனை செய்யப்பட்டுள்ளது. இங்கிலாந்தின் லட்சிங்டன்னில் வசித்து வரும் கிம் பிராட்டன் ( வயது 44 )  தனது தோட்டத்தில் கோழிகளை வளர்த்து வருகிறார். அவரது கோழிகளில் பிங் பாங் என்ற கோழி அதிசயமாக பந்து போல வட்ட வடிவத்தில் முட்டையிட்டுள்ளது.
இந்த முட்டையை ஆன்லைனில் விற்க கிம் முடிவு செய்தார். பின்னர் ஈபேயில் விற்பனைக்காக விளம்பரத்திற்கு அனுப்பினார். ஏலம் கேட்பவர்களில் பலர் அதிசய முட்டையை வாங்கி பாதுகாக்கவே முடிவு செய்திருந்தனர். இறுதியாக ஒருவருக்கு 480 pounds (around 46.000 / $741)  ரூ46ஆயிரத்திற்கு இந்த முட்டை விற்கப்பட்டது.

அந்த முட்டையை விற்ற பணத்தை அவரது நண்பரின் மகன் நோயால் இறந்ததன் நினைவாக, சிஸ்டிக் பிப்ரோசிஸ் என்ற டிரஸ்ட்டுக்கு நன்கொடையாக கொடுத்துவிடுவதாக கிம் தெரிவித்துள்ளார்.




No comments:

Post a Comment