Saturday, April 4, 2015

தங்கத்தால் உருவாக்கப்பட்ட சைக்கிள்!



தங்கத்தால் உருவாக்கப்பட்ட சைக்கிள்!


தங்க நகை வடிவமைப்பாளராக இருக்கிறார் ஹக் பவர் . ஆபரணங்கள் மட்டுமின்றி, அன்றாட வாழ்க்கையில் பயன்படுத்தும் பொருட்களையும் தங்கத்தால் செய்து விற்பனைக்கு வைத்திருக்கிறார். ஹவுஸ் ஆஃப் சாலிட் கோல்ட் என்ற பெயரில் கம்பெனியை நடத்தி வருகிறார். பல்குத்தும் குச்சி, பற்கள், ஷு லேஸ், காது குடையும் குச்சி, சாப்ஸ்டிக், கண்ணாடி, தட்டு போன்றவற்றைத் தங்கத்தால் வடிவமைத்திருக்கிறார்.

அவர் உருவாக்கிய பொருட்களிலேயே தங்கத்தால் உருவாக்கிய சைக்கிள்தான் மிகவும் திருப்தியளிப்பதாகச் சொல்கிறார். வைரக் கற்கள் பதிக்கப்பட்ட கால்பந்தும் வாடிக்கையாளர்களைக் கவர்கிறது என்கிறார். இந்தப் பொருட்களைப் பரிசாக அளித்தால், வாழ்நாள் முழுவதும் நினைவில் வைத்திருப்பார்கள். அதற்காக எவ்வளவு வேண்டுமானாலும் செலவு செய்யலாம் என்கிறார் பவர்.

No comments:

Post a Comment