Tuesday, May 5, 2015

இங்கிலாந்தின் குட்டி இளவரசியின் பெயர் சார்லட் எலிசபத் டயானா குழந்தையின் மதிப்பு சுமார் ரூ.1600 கோடி

இங்கிலாந்தின் குட்டி இளவரசியின் பெயர்
சார்லட் எலிசபத் டயானா
குழந்தையின் மதிப்பு சுமார் ரூ.1600 கோடி


இங்கிலாந்தின் குட்டி இளவரசிக்கு சார்லட் எலிசபத் டயானா என பெயர் சூட்டப்பட்டுள்ளதாகவும், கேம்ப்ரிட்ஜின் மதிப்பிற்குரிய இளவரசி சார்லட் என்று அவர் அழைக்கப்படுவார் எனவும் கென்சிங்டன் அரண்மனை அதிகாரப்பூர்வமாக தகவலை அறிவித்துள்ளது.
இதேவேளை, பிரிட்டிஷ் இளவரசர் வில்லியம் மற்றும் கேட் தம்பதிக்கு சமீபத்தில் பிறந்த பெண் குழந்தையின் மதிப்பு 80 மில்லியன் பவுண்டுகள் (சுமார் ரூ.1600 கோடி) என்று மதிப்பிடப்பட்டுள்ளது.
இந்த மாதம் 2ம் திகதி வில்லியம்-கேட் தம்பதிக்கு பெண் குழந்தை ஒன்று பிறந்தது. அதன் நினைவாக, தற்போது பிரிட்டனில் அந்தக் குழந்தையின் படம் பொறித்த தேநீர் கோப்பைகள், டி-ஷர்ட்டுகள், கைக்குட்டைகள் போன்ற பொருட்களின் விற்பனை சூடு பிடித்துள்ளது.
இதன் மூலம் சுமார் ரூ1600 கோடிக்கு வணிகம் நடைபெறும் என்று கணக்கிடப்பட்டுள்ளது.


No comments:

Post a Comment