Monday, May 4, 2015

இந்தோனேசியாவில் சுனாமி எச்சரிக்கை இலங்கைக்கு எதுவித பாதிப்புமில்லை

இந்தோனேசியாவில் சுனாமி எச்சரிக்கை
இலங்கைக்கு எதுவித பாதிப்புமில்லை


பப்புவா நியூகினியா அருகே சக்தி வாய்ந்த நிலநடுக்கம் எற்பட்டுள்ளது. ரிக்டர் அளவில் 7.5 ஆக பதிவான இந்த நிலநடுக்கத்தால் ஏற்பட்ட பாதிப்புக்கள் குறித்து உடனடி தகவல்கள் ஏதும் இல்லை. எனினும் சுனாமி எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
 கடலோரத்தில் வசிக்கும் மக்கள் பாதுகாப்பான இடங்களுக்குச் செல்ல அறிவுறுத்தப்பட்டுள்ளனர். பசிபிக் கடலில் 300 கிமீட்டர் வரை கடல் அலைகள் தாக்க கூடும் என அமெரிக்க புவியியல் ஆராய்ச்சி மையம் தெரிவித்துள்ளது.
பசிபிக் பெருங்கடலை ஒட்டியுள்ள பப்புவா நியூகினியாவில் கோகோபோ நகரில் இருந்து தெற்கு - தென் மேற்கு பகுதியில் கடந்த வாரத்தில்  6.7 ரிக்டர் அளவிலான நில நடுக்கம் தாக்கியது, அதே போல் மார்ச் மாதத்தில் இங்கு  7.5 ரிக்டர் அளவில் மார்ச்மாதம் ஒரு நிலநடுக்கம் ஏற்பட்டது என்பதும் குறிப்பிடத்தக்கது.

இந்த சுனாமி எச்சரிக்கையினால் இலங்கைக்கு எவ்விதமான பாதிப்பும் ஏற்படாது என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

No comments:

Post a Comment