Saturday, June 27, 2015

தபால் மூலம் வாக்களிப்பதற்கு ஜுலை 3 ஆம் திகதி தொடக்கம் 14 ஆம் திகதிவரை விண்ணப்பிக்க முடியும்

தபால் மூலம் வாக்களிப்பதற்கு
ஜுலை 3 ஆம் திகதி தொடக்கம் 14 ஆம் திகதிவரை
விண்ணப்பிக்க முடியும்


பொதுத் தேர்தலில் தபால் மூலம் வாக்களிப்பதற்கான விண்ணப்பம் கோரப்பட்டுள்ளது.    இதன்படி, ஜுலை 3 ஆம் திகதி தொடக்கம் 14 ஆம் திகதிவரை விண்ணப்பிக்க முடியும் என்று தேர்தல் ஆணையாளர் அறிவித்துள்ளார். 

பொதுத் தேர்தல்  ஆகஸ்ட் 17ஆம் திகதி நடைபெறவுள்ள நிலையில், அதற்கான வேட்பு மனு தாக்கல் ஜூலை 6ஆம் திகதிக்கும்  ஜூலை 15ஆம் திகதிக்கும் இடையே ஏற்றுக் கொள்ளப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது

No comments:

Post a Comment