Tuesday, June 2, 2015

பாதணி கடையில் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன சாதாரண பெஞ்சில் அமர்ந்திருந்து பாதணிகளை தெரிவுசெய்தார்.

பாதணி கடையில் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன


சாதாரண பெஞ்சில் அமர்ந்திருந்து பாதணிகளை தெரிவுசெய்தார்.

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தமக்கு தேவையான பாதணிகளை கொள்வனவு செய்வதற்காக கொழும்பிலுள்ள பாதணி கடை ஒன்றுக்கு பாதுகாப்பு கெடுபிடிகள் எதுவுமின்றி சாதாரண மனிதர் போன்று சென்றிருந்தார்.
அவர், வாடிக்கையாளர்கள் அமர்ந்து பாதணிகளை அணிந்து சரிபார்க்கும் சாதாரண பெஞ்சில் அமர்ந்திருந்து  தமக்கு தேவையான பாதணிகளை தெரிவுசெய்தார்.
பாதணி கடையின் பணியாளர்கள் பாதணிகளை ஜனாதிபதியின் அருகில் வைத்தனர். பாதணி கடைக்கு ஜனாதிபதி சென்றபோது பாதுகாப்பு தரப்பினர் அங்கு வளைத்துக் கொண்டு பாதுகாப்பு வழங்கவில்லை.
ஜனாதிபதி வருகை தந்த எந்த வீதிகளும் மூடப்படவில்லை. அவர் விஜயம் செய்திருந்த பகுதிகள் பொதுமக்கள் போக்குவரத்து செய்யமுடியாதவாறு தடைசெய்யப்பட வலயமாக பாதுகாப்புப் பிரிவினரால் அறிவிக்கப்படவும் இல்லை.






No comments:

Post a Comment