Thursday, July 2, 2015

ஹிந்தி நடிகை ஹேமமாலினி சென்ற கார் விபத்து 4 வயது சிறுமி பரிதாப பலி


ஹிந்தி நடிகை ஹேமமாலினி சென்ற கார் விபத்து
4 வயது சிறுமி பரிதாப பலி

பழம்பெரும்ஹிந்தி நடிகை ஹேமமாலினி இந்தியாவிலுள்ள உத்தரபிரதேச மாநிலம் மதுரா தொகுதி பா.ஜனதா எம்.பி.யாக இருக்கிறார்அவர் நேற்று இரவு ராஜஸ்தான் மாநிலம் தவுசா என்ற இடத்தில் சென்று கொண்டிருந்தபோதுஅவரது கார் விபத்தில் சிக்கியதுஅவரது காரும்மற்றொரு காரும் மோதிக்கொண்டனஇந்த விபத்தில் 4 வயது பெண் குழந்தை பலியானதுநடிகை ஹேமமாலினிநெற்றியில் பலத்த காயம் அடைந்தார்அவரது நெற்றியில் இருந்து  இரத்தம் கொட்டியதுஅவரது கண்ணிலும் காயம் ஏற்பட்டதுமேலும் குழந்தையின் பெற்றோர்கள் உட்பட 4 பேரும் காயம் அடைந்தனர் எனத் தெரிவிக்கப்படுகின்றது.


விபத்தில் காயம் அடைந்த ஹேமமாலினிஉடனடியாக அங்கிருந்து ராஜஸ்தான் தலைநகர் ஜெய்ப்பூருக்கு கொண்டு செல்லப்பட்டு அங்குள்ள ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டார்அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறதுஇதற்கிடையே விபத்து காரணமாக நடிகை ஹேமமாலினியின் கார் டிரைவரை  பொலிஸார் கைதுசெய்து விசாரித்து வருகின்றனர் எனவும் இந்திய ஊடகங்கள் செய்திகளை வெளியிட்டுள்ளன.



No comments:

Post a Comment