Friday, July 3, 2015

சவூதி அரேபியாவில் நடைபெற்ற சாலை விபத்தில் 5 தொழிலாளர்கள் அந்த இடத்திலேயே பலி

சவூதி அரேபியாவில் நடைபெற்ற சாலை விபத்தில்
5 தொழிலாளர்கள் அந்த இடத்திலேயே பலி

சவூதி அரேபியாவில் நடைபெற்ற சாலை விபத்தில் 5 தொழிலாளர்கள் பரிதாபமாக விபத்து இடம்பெற்ற இடத்திலேயே உயிரிழந்தனர்.
சவூதியில் வேலை செய்து வந்த 5 தொழிலாளர்கள் பணி முடித்துவிட்டு சால்வா பகுதியில் உள்ள தம்மாம் என்ற இடத்தில் வாகனத்தில் சென்று கொண்டிருந்தனர். அப்போது அந்த வழியாக வேகமாக வந்த டிரெய்லர் லாரி, தொழிலாளர்கள் வந்த வாகனத்தின் மீது பயங்கரமாக மோதியது.
இந்த விபத்தில் வாகனத்தில் இருந்த 5 பேரும் உடல் நசுங்கி பரிதாபமாக உயிரிழந்தனர் என அறிவிக்கப்படுகின்றது. விபத்து குறித்து அதிகாரி ஒருவர் கூறுகையில், "விபத்து நடத்த இடத்திலேயே அனைவரும் இறந்துவிட்டனர் எனத் தெரிவித்துள்ளார்.

உயிரிழந்தவர்கள் அனைவரும் இந்தியாவிலுள்ள கேரளாவைச் சேர்ந்தவர்கள் எனத் தெரியவந்துள்ளது. விபத்தில் உயிரிழந்தவர்களின் பெயர் பட்டியலை சவூதி அரேபியாவில் உள்ள இந்திய தூதரகம் வெளியிட்டுள்ளது.

No comments:

Post a Comment