Saturday, July 4, 2015

அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா விடுக்கும் விசேட அறிக்கை.

அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா

விடுக்கும் விசேட அறிக்கை.


ரமழான் மாதத்தின் நடுப்பகுதியை அடைந்து அல்லாஹ்வின் அருளை (ரஹ்மத்தை) பாவ மன்னிப்பை (மக்பிரத்தை) வேண்டி நிற்கும் நாம் நாட்டிலே சமாதானமும், ஐக்கியமும், நிம்மதியான வாழ்வும் கிடைக்க அதிகமதிகம் பிராரத்திக்க வேண்டும்.
ரமழான் மாதத்தின் நடுப்பகுதியில் தான் சஹாபாக்களின் வீர வரலாறுகள் பல பதியப்பட்டிருக்கின்றன, 17 ஆவது நாளன்று நடைபெற்ற தியாகத்தின் மூலமே உலகில் இஸ்லாம் ஆழமாக வேரூன்ற வழி வகுத்தது. அவ்வுத்தமத் தோழர்கள் அல்லாஹ்வின் திருப்பொருத்தத்தைப் பெற்றுக்கொண்ட நல்லோர் ஆவார்கள்.
எனவே, அந்த சஹாபாக்களின் தியாக வரலாறுகளின் சிறப்புகளை மகிமைகளை எடுத்துச் சொல்லும் ஒரு சந்தர்ப்பமாக நடுப்பகுதியை பயன்படுத்திக்கொள்வது பொருத்தமாகும். சகல சஹாபாக்களும் அல்லாஹ்வின் திருப்திக்குட்பட்டவர்கள் ஆவர், அவர்களின் கௌரவத்தை எந்த வகையிலும் தூற்றுவதோ இகழ்ந்துரைப்பதோ அல்லாஹ்வின் கோபத்தை ஈட்டித்தர வல்லதாகும்.
எனவே, அவ்வுத்தம சஹாபாக்களின் மாண்புகளை எடுத்துக்கூறி அஹ்லுஸ் ஸஷுன்னத் வல் ஜமாஅத்தின் கொள்கையில் இருந்து வரவும், சஹாபாக்களை தூற்றுதல் இழிவுபடுத்துதல் போன்ற பாவச்செயல்களிலுருந்து தவிர்ந்து வாழவும் பொதுமக்களுக்கு உபதேசிக்குமாறு நாட்டிலுள்ள சகல உலமாக்களையும், கதீப்மார்களையும், இமாம்களையும் அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா வேண்டிக்கொள்கிறது.

அஷ்ஷெய்க் எச். உமர்தீன்
செயலாளர்பிரச்சாரக் குழு
அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா

No comments:

Post a Comment