Wednesday, September 30, 2015

ஊடகங்களுக்கு நடத்தை நெறிகள் அவசியம் ‘தி இந்து’ குழும தலைவர் என். ராம் கருத்து

ஊடகங்களுக்கு நடத்தை நெறிகள் அவசியம்
தி இந்துகுழும தலைவர் என். ராம் கருத்து

ஊடக நிறுவனங்கள் அனைத் தும் நடத்தை நெறிகளை அறிமுகப் படுத்துவது மிகவும் அவசியம் என்றுதி இந்துகுழும தலைவர் என்.ராம் வலியுறுத்தியுள்ளார்.
லேக் ஹவுஸ் குரூப்பின் நிறுவன முன்னாள் தலைவர் எஸ்மண்ட் விக்ரமசிங்க நினைவாக ஆண்டுதோறும் விருதுகள் வழங்கப்பட்டு வருகின்றன. இந்த ஆண்டு விழா நேற்றுமுன்தினம் மாலை கொழும்பில் நடைபெற்றது. இதில்தி இந்துகுழும தலைவர் என். ராம் பங்கேற்று பேசிய தாவது:
பொருளாதார ரீதியாக நிலைத்திருப்பதும், அரசியல் தலையீடுகளால் ஏற்படும் பிரச்சினைகளை சமாளிப்பதும்தான் இப்போது ஊடக நிறுவனங்கள் எதிர் கொள்ளும் சவால்கள். ஊடக நிறுவன உரிமையாளர்களின் நிதி ஆதாரத்தைப் பெருக்கவும், அரசியல் ஆதாயங்களுக்காகவும் செய்திகளையும், கட்டுரைகளையும், விமர்சனங்களை திரித்துக் கூறும்போக்கு, ஊடகத்துறை வர்த்தக மயமாகி வருவது, பத்திரிகைகளுக்குள் காணப்படும் தீவிர விலைக்குறைப்பு போட்டி போன்ற எதிர்மறை போக்கு பெருகி வருகிறது. இது தவிர தமது பிரதான வர்த்தக நோக்கத்தை வேறு ஒன்றாக கொண்டு இயங்கும் பெரிய கார்ப்பரேட் நிறுவனங்கள் செய்தி ஊடகத் துறையை தமது கிளையாக வைத்துக்கொண்டு செயல்படும்போது மேற்குறிப்பிட்ட எதிர்மறை போக்குகள் இன்னும் வலுவடையும்.
ஊடக நிறுவனங்கள் நடத்தை நெறிமுறைகளை நிர்ணயித்துக் கொண்டு அந்த வரம்புக்குள் பத்திரிகையாளர்களும் ஊடகத் தொழில் நிறுவனங்களும் இயங்க வேண்டும். மேலும் ஊடக நிறுவனங்களுக்குள் கட்டுப் பாடுடன் செயல்படுவதற்கான நடைமுறை ஏற்பாடும் அவசியம் இவ்வாறு அவர் பேசினார்.

 
எஸ்மண்ட் விக்ரமசிங்க நினைவு விழாவில் விருது பெற்ற நியூ உதயன் பப்ளிகேஷன்ஸ் குழும தலைவர் இ.சரவணபவன். உடன் ‘தி இந்து’ குழும தலைவர் என்.ராம்,  பிரதமர் ரணில் விக்ரமசிங்க 

சந்திரிகாவைக் கொல்ல முயன்ற வழக்கு இருவருக்கு 300 ஆண்டுகள் வரை சிறை

சந்திரிகாவைக் கொல்ல முயன்ற வழக்கு
இருவருக்கு 300 ஆண்டுகள் வரை சிறை


முன்னாள் ஜனாதிபதி சந்திரிகா குமாரதுங்காவைக் கொல்ல முயன்ற வழக்கில், குற்றம்சாட்டப்பட்ட ஒருவருக்கு 290 ஆண்டுகளும், மற்றொருவருக்கு 300 ஆண்டுகளும் சிறைத் தண்டனை விதித்து, நீதிமன்றம் நேற்று 30 ஆம் திகதி புதன்கிழமை தீர்ப்பளித்தது.
கடந்த 1999-ஆம் ஆண்டு நடைபெற்ற ஜனாதிபதி தேர்தலின்போது, சந்திரிகா குமாரதுங்கா கலந்து கொண்ட பிரசாரக் கூட்டத்தில் அவரைக் குறிவைத்து தற்கொலைத் தாக்குதல் நிகழ்த்தப்பட்டது. அவர் அருகே பெண் விடுதலைப் புலி ஒருவர் தன் உடலில் பொருத்தியிருந்த குண்டை வெடிக்கச் செய்தார்.  இதில் சந்திரிகா குமாரதுங்காவின் வலது கண்ணில் பலத்த காயம் ஏற்பட்டது.
 அதனைத் தொடர்ந்து எழுந்த அனுதாப அலையால் சந்திரிகா குமாரதுங்கா அந்த ஜனாதிபதி தேர்தலில் அமோக வெற்றி பெற்றார். அந்தத் தற்கொலைத் தாக்குதல் தொடர்பாக நடைபெற்று வந்த வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட வேலாயுதன் வரதராஜாவுக்கு 290 ஆண்டுகளும், சந்திரா ஐயர் என்கிற ரகுபதி சர்மாவுக்கு 300 ஆண்டுகளும் சிறைத் தண்டனை விதித்து உயர் நீதிமன்றம் புதன்கிழமை தீர்ப்பளித்தது.

 தற்போது இலங்கையில் நடைபெற்றுவரும் தேசிய அரசில், தேசிய ஒற்றுமை, நல்லிணக்கப் பிரிவுத் தலைவராக சந்திரிகா குமாரதுங்கா பொறுப்பு வகித்து வருகிறார்.

ஜனாதிபதியின் சர்வதே சிறுவர் தின வாழ்த்துச் செய்தி

ஜனாதிபதியின்
சர்வதே சிறுவர் தின வாழ்த்துச் செய்தி


“சிறுவர் நட்புடைய சூழல் – உலகிற்கு ஒளியூட்டும் அழகிய தேசம் என்ற கருப்பொருளின் கீழ் நடைபெறும் இவ்வருட சர்வதேச சிறுவர் தின நிகழ்வை முன்னிட்டு இந்த வாழ்த்துச் செய்தியை அனுப்புவதில் பெருமகிழ்ச்சியடைகிறேன்.
ஒரு தேசம் அல்லது ஒரு மக்கள் சமூகம் தனது மக்கள் அல்லது சமூகப் பிள்ளைகளுக்கு வழங்கும் அன்பு மற்றும் பராமரிப்பினூடாக உலகின் உயர்ந்த அங்கீகாரத்தைப் பெறுக்கொள்கின்றனர். மனித நாகரீகத்தின் மிக உயர்ந்த பெறுமானம் பிள்ளைகளுக்கான அன்பும் இரக்கமுமாகும். எனவே தான் “உலகில் மிகச் சிறந்தவை சிறுவர்களுக்குச் சொந்தமானவையாகும் எனச் சொல்லப்படுகிறது.
சிறுவர்களுக்கான பாதுகாப்பு முதலில் பெற்றௌர்களிடமிருந்தும் பின்னர் ஆசிரியர்களிடமிருந்தும் மூன்றாவதாக பெரியவர்களிடமிருந்தும் சமூகத்திலிருந்தும் கிடைக்கப் பெறவேண்டும். பிள்ளைகளின் பாதுகாப்புக்கான ஒட்டுமொத்த நிபந்தனையற்ற பொறுப்பு முழுத் தேசத்தின் மீதும் உள்ளது. என்றாலும் இப்பொறுப்பு சமூகத்தினால்  பெரிதும் தட்டிக் கழிக்கப்பட்டிருப்பதையே அண்மைய நிகழ்வுகள் எடுத்துக்காட்டுகின்றன. இந்த நிலைமையை உடனடியாக சரிப்படுத்துவதற்கும் சட்டங்களை நடைமுறைப்படுத்தவதற்கான ஏற்பாடுகள் செய்யவூம் இருக்கின்ற சட்டங்களைத் திருத்துவதற்கு அல்லது புதிய சட்டங்களை அறிவுமுகப்படுத்துவதற்கும் நடவடிக்கைகள் எடுக்கப்பட வேண்டும்.
மேலும் பெற்றௌர்கள்இ வளHந்தவHகள் மற்றும் சமூகம் இந்த துரதிஷ்டவசமான பேரனர்த்தங்களிலிருந்து எமது பிள்ளைகளைப் பாதுகாப்பதற்கு முழுமையாக தங்களை அர்ப்பணிக்க வேண்டும். இந்தவகையில் அரசாங்கம்  ஏற்கெனவே பல நடவடிக்கைகளை எடுத்துள்ளதோடுஇ இப்பணியில் சமூகமும் முழுமையாக இணைந்து கொள்ள வேண்டும்.
தங்களது தொடர்ந்தேர்ச்சியான கவனம் பிள்ளையின் பாதுகாப்புக்கான ஒரு உத்தரவாதம் என்பதை பெற்றௌர்கள் உணர்ந்து கொள்ள வேண்டும். இந்த விடயத்தில் விடப்படும்  கவனக்குறைவு பிள்ளையின் பாதுகாப்பை கேள்விக்குறியாக்கிவிடுவதுடன், அது அசம்பாவிதங்கள் ஏற்படுவதற்கான ஒரு திறந்த அழைப்பாகவூம் மாறிவிடுகிறது.
சர்வதேச சிறுவர் தினத்தை ஒரு நாளையில் கொண்டாடுவது மட்டும் போதுமானதல்ல. ஒவ்வொரு நாளும் சிறுவர்களின் பாதுகாப்பிற்காக அர்ப்பணிக்கப்பட்டால்தான் அவர்கள் எதிர்பார்க்கும் வாழ்க்கைக்கான பாதுகாப்பை அவர்கள் பெற்றுக் கொள்வார்கள்.
சர்வதேச சிறுவர் தின கொண்டாட்டங்கள் முழுமையாக வெற்றிபெற எனது மனமார்ந்த வாழ்த்துக்கள்.
மைத்ரிபால சிறிசேன

ஜனாதிபதியின் சர்வதே முதியோர் தின வாழ்த்துச் செய்தி

ஜனாதிபதியின்
சர்வதே முதியோர் தின வாழ்த்துச் செய்தி


எந்தவொரு சமூகத்திலும் முதியவர்கள் மிகவும் பெறுமதி வாய்ந்த மனித வளமாகக் கருதப்படுகின்றனர். அவர்கள் வாழ்க்கை அனுபவங்களினூடாக அறிவைப் பெற்றுக் கொள்கிறார்கள். தொன்மைக்காலம் முதலே கீழைத்தேய மக்கள் முதியவர்களுக்கு உரிய மரியாதையைக் கொடுத்து அவர்களுக்கு சமூகத்திலும் குடும்பத்திலும் உயர்ந்த ஸ்தானத்தை வழங்கிவந்துள்ளனர். இலங்கையர்கள் தங்களது விரிந்த குடும்ப முறைமையில் முதியவர்களுக்கு ஒரு விசேட இடத்தை வழங்கி அவர்களை குடும்பத்தின் பெருமையாகவும் கருதுகிறார்கள்.
எவ்வாறானபோதும் தற்போதைய உலகில் ஏற்பட்டுவரும் நகரமயமாதல் முதியவர் என்ற பாத்திரத்தின் இருப்புக்கு ஒரு பெரும் சவாலாக மாறியுள்ளது. இன்று பல முதியவர்கள் பழைய வீடுகளில் தங்கவைக்கப்பட்டுள்ள அதேநேரம் பிள்ளைகள் அவர்களது வீடுகளில் இயந்திரங்களாக தங்களது வாழ்க்கையைக் கழித்து வருகின்றனர்.
இத்தகையதொரு சூழலிலேயே இன்றைய சர்வதேச முதியோர் தினம் கொண்டாடப்படுகி;றது. இதுபோன்ற ஒரு நாளில் இன்றைய உலகில் முதியவர்கள் எதிர்நோக்கும் துரதிஷ்டவசமான நிலைமைகளைத் தவிர்ப்பதற்கு நடவடிக்கைகள் எடுக்கப்படுவதற்கான தேவையை வலியுறுத்தி ஒரு தேசிய உரையாடல் இடம்பெற வேண்டும்.
இலங்கைச் சமூகம் தனது கடந்தகால வரலாற்றிலிருந்து பெற்றுக்கொண்ட பெறுமதிவாய்ந்த பண்பாடுகளுக்கமைய ஒரு தீர்வைக் கண்டடைவதே இன்றுள்ள சவாலாகும். நவீனமயப்படுத்தல் காரணமாக நகரமயமாதலுக்கு உட்பட்டுள்ள சமூகத்திற்காக முதியவர்களது அறிவையும் அனுபவத்தையும் பயன்படுத்திக் கொள்வதற்கும் முதியவர்களுக்கான பாதுகாப்பை உறுதி செய்வதற்கும் முதியோர்களுக்கான தேசிய செயலகத்தினால் எடுக்கப்பட்டுவரும் நடவடிக்கைகள் பாராட்டத்தக்கதாகும்.
சர்வதே முதியோர் தினத்துடன் இணைந்ததாக நடைபெறும் தேசிய முதியோர்தின கொண்டாட்டங்கள் முழுமையாக வெற்றிபெற எனது மனமார்ந்த வாழ்த்துக்கள்.
வயோதிபர்களுக்கு ஒரு பாதுகாப்பான சமூகத்தை உருவாக்குவதன் மூலமே அவர்களது மனக்குறைகளைப் போக்க முடியும்.

மைத்ரிபால சிறிசேன

மும்பை ரயில்கள் குண்டு வெடிப்பு வழக்கில் தீர்ப்பு 5 பேருக்கு தூக்கு; 7 பேருக்கு ஆயுள் சிறை

மும்பை ரயில்கள் குண்டு வெடிப்பு வழக்கில் தீர்ப்பு

5 பேருக்கு தூக்கு; 7 பேருக்கு ஆயுள் சிறை


மும்பை புறநகர் ரயில்களில் கடந்த 2006ஆம் ஆண்டு நிகழ்ந்த தொடர் குண்டுவெடிப்புச் சம்பவங்கள் தொடர்பான வழக்கில், 5 பேருக்கு மரண தண்டனை விதிக்கப்பட்டது.  மேலும் 7 பேருக்கு ஆயுள் சிறைத் தண்டனை விதிக்கப்பட்டது.
 மும்பையில் உள்ள திட்டமிட்ட குற்றங்களைக் கட்டுப்படுத்துதல் தொடர்பான மகாராஷ்டிர சிறப்பு நீதிமன்றத்தில் (எம்சிஓசிஏ) கடந்த 9 ஆண்டுகளாக நடைபெற்ற வழக்கில், இந்தத் தீர்ப்பை நீதிமன்றம் நேற்று 30 ஆம் திகதி புதன்கிழமை அளித்தது.
 மும்பையின் 7 புற நகர் ரயில்களின் முதல் வகுப்புப் பெட்டிகளில் கடந்த 2006ஆம் ஆண்டு ஜூலை மாதம் 11ஆம் திகதி 10 நிமிட இடைவெளியில் ஆர்டிஎக்ஸ் வெடிகுண்டுகள் அடுத்தடுத்து வெடித்துச் சிதறின.
 இந்தக் குண்டு வெடிப்பில், அந்த ரயில்களில் பயணம் செய்த பெண்கள், குழந்தைகள் ட்பட 189 பேர் உயிரிழந்தனர். 829 பேர் பலத்த காயமடைந்தனர்.
 இந்தக் குண்டு வெடிப்புகள் தொடர்பாக மகாராஷ்டிர பயங்கரவாத எதிர்ப்புப் படை (ஏடிஎஸ்) விசாரணை நடத்தி, 13 பேரைக் கைது செய்தது. இதுதொடர்பாக 2006ஆம் ஆண்டு நவம்பர் மாதம், மும்பை எம்சிஓசிஏ சிறப்பு நீதிமன்றத்தில் 30 பேருக்கு எதிராக ஏடிஎஸ் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்தது. அதில், கைது செய்யப்பட்ட 13 பேரைத் தவிர்த்து, எஞ்சிய 17 பேர் தலைமறைவாக இருப்பதாக தெரிவிக்கப்பட்டிருந்தது. அந்த 17 பேரில், 13 பேர் பாகிஸ்தானியர்கள் என்றும், அவர்களில் லஷ்கர்--தொய்பா அமைப்பு பயங்கரவாதி ஆஸாம் சீமாவும் ஒருவர் எனவும் குறிப்பிடப்பட்டிருந்தது.
 நீதிமன்றத்தில் நடைபெற்ற வழக்கு விசாரணையின்போது, கைது செய்யப்பட்டவர்களில் 11 பேர், குண்டு வெடிப்புகளில் தங்களுக்குத் தொடர்பிருப்பதை முதலில் ஒப்புக் கொண்டனர். எனினும், பின்னர் தங்களது நிலைப்பாட்டை மாற்றிக் கொண்டனர்.
 இதனிடையே, வழக்குத் தொடர்பாக அரசுத் தரப்பில் 8 ஐபிஎஸ் அதிகாரிகள், 5 ஐஏஎஸ் அதிகாரிகள், 18 மருத்துவர்கள் உள்ளிட்ட 192 பேரிடம் குறுக்கு விசாரணை நடத்தப்பட்டது. குற்றம்சாட்டப்பட்டோர் தரப்பில், 51 பேரிடம் குறுக்கு விசாரணை நடத்தப்பட்டது. ஒருவர், நீதிமன்றச் சாட்சியாக செயல்பட்டார்.
 இந்நிலையில், மும்பை எம்சிஒசிஏ சிறப்பு நீதிமன்றத்தில் நடைபெற்ற வழக்கு விசாரணைக்கு உச்ச நீதிமன்றம் கடந்த 2008ஆம் ஆண்டு திடீரென இடைக்காலத் தடை விதித்தது. ஆனால், அந்த இடைக்காலத் தடையை 2 ஆண்டுகள் கழித்து, அதாவது 2010ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் 23ஆம் திகதி உச்ச நீதிமன்றம் விலக்கிக் கொண்டது.
 இதைத் தொடர்ந்து, மும்பை எம்சிஓசிஏ சிறப்பு நீதிமன்றத்தில் மீண்டும் தொடங்கிய வழக்கு மீதான விசாரணை, கடந்த 2014ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் 19ஆம் திகதி நிறைவடைந்தது. பின்னர், அந்த வழக்கு மீதான தீர்ப்பு, திகதி குறிப்பிடப்படாமல் நீதிமன்றத்தால் ஒத்தி வைக்கப்பட்டது.
 இந்நிலையில், இந்த வழக்கில் கடந்த 11ஆம் திகதியன்று மும்பை எம்சிஓசிஏ சிறப்பு நீதிமன்றம் தீர்ப்பை அறிவித்தது.
கமால் அகமது அன்சாரி (37)
முகமது பைசல் ஷேக் (36)
 சித்திகி (30)
நவீத் ஹுசேன் கான் (30)
ஆசிஃப் கான் (38)
 தன்வீர் அகமது அன்சாரி (37)
 முகமது மஜீத் ஆலம் ஷஃபி (32)
ஷேக் ஆலம் ஷேக் (41)
முகமது சாஜித் அன்சாரி (34)
முஜாமில் ஷேக் (27)
சோஹைல் மெஹ்மூத் ஷேக் (43)
ஜமீர் அகமது ஷேக் (36)
ஆகிய 12 பேரையும் குற்றவாளிகள் என்று நீதிமன்றம் அறிவித்தது. ஒருவரை மட்டும் விடுதலை செய்தது.
 அதன்பின்னர், குற்றவாளிகள் என்று அறிவிக்கப்பட்ட 12 பேருக்கும் தண்டனை விதிப்பது தொடர்பாக நீதிமன்றத்தில் வாதங்கள் நடைபெற்று வந்தன. அப்போது, அரசுத் தரப்பில் குற்றவாளிகள் என்று அறிவிக்கப்பட்ட 12 பேரில் 8 பேருக்கு மரண தண்டனையும், 4 பேருக்கு ஆயுள் சிறைத் தண்டனையும் விதிக்க வேண்டும் என்று வலியுறுத்தப்பட்டது. இதுதொடர்பான இருதரப்பு வாதங்களையும் கேட்டறிந்த மும்பை எம்சிஓசிஏ சிறப்பு நீதிமன்றம், தண்டனை விவரங்களை வெளியிடுவதை ஒத்திவைத்தது.
 இந்நிலையில், மும்பை எம்சிஓசிஏ சிறப்பு நீதிமன்ற நீதிபதி யாதின் டி.ஷிண்டே 12 பேருக்கான தண்டனை விவரங்களை புதன்கிழமை அறிவித்தார்.  அதன்படி,
கமால் அகமது அன்சாரி
 முகமது பைசல் ஷேக்
சித்திகி
நவீத் ஹுசேன் கான்
ஆசிஃப் கான்  ஆகிய 5 பேருக்கும் மரண தண்டனை விதித்தார்.
 தன்வீர் அகமது அன்சாரி,
முகமது மஜீத் ஆலம் ஷஃபி,
 ஷேக் ஆலம் ஷேக்,
முகமது சாஜித் அன்சாரி,
முஜாமில் ஷேக்,
சோஹைல் மெஹ்மூத் ஷேக்,
ஜமீர் அகமது ஷேக்
ஆகிய 7 பேருக்கும் ஆயுள் சிறைத் தண்டனை விதித்து நீதிபதி தீர்ப்பளித்தார். இத்துடன், 11 பேருக்கு தலா ரூ. 11 லட்சமும், முகமது பைசலுக்கு மட்டும் ரூ. 15.45 லட்சமும் என மொத்தம் ரூ.1.51 கோடி அபராதமும் விதித்து நீதிபதி உத்தரவிட்டார்.
 5 பேருக்கான மரண தண்டனையை நீதிபதி அறிவித்தபோது, "அவர்கள் அனைவரையும் மரணிக்கும் வரை தூக்கிலிட வேண்டும்' என்றார்.
 மேல்முறையீடு செய்ய முடிவு:
 இதனிடையே, சிறப்பு நீதிமன்றத்தின் தீர்ப்பை எதிர்த்து மும்பை உயர் நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யப் போவதாக மரண தண்டனை விதிக்கப்பட்டவர்களும், அவர்களது உறவினர்களும் தெரிவித்துள்ளனர்.

 இந்த வழக்கில், குற்றம்சாட்டப்பட்டோருக்கு சட்ட ரீதியிலான உதவிகளைச் செய்துவரும் ஜமாய்த்-உலேமா--மகாராஷ்டிரா என்ற அமைப்பும் மும்பை சிறப்பு நீதிமன்றத்தின் தீர்ப்பை எதிர்த்து மேல்முறையீடு செய்யப் போவதாகத் தெரிவித்துள்ளது.

இலங்கை தபால் துறையின் வரலாறு மு.மு. அப்துல் முபாறக் (SPM, JP)

உலக அஞ்சல் தினம். அக்டோபர் 09, 2015

இலங்கை தபால் துறையின் வரலாறு

மு.மு. அப்துல் முபாறக் (SPM, JP)
(உப தபால் அலுவலகம், ஆஸ்பத்திரி வீதி, சாய்ந்தமருது)

..... உலகின் பல்வேறு நாடுகளுக்குரிய புவியியல், அரசியல்,
மதம் போன்ற பல்வேறு எல்லை மற்றும் தடைகளைத் தாண்டி எமது
மக்களை முழு உலகுக்கும் இணைக்கின்றோம். மக்கள்
அவர்களுக்கேயுரிய பிரத்தியகமானதும், மிகப்பெறுமதி வாய்ந்ததுமான
தகவல்களையும், பொருட்களையும் எம்மிடம் ஒப்படைப்பது அவற்றைப்
பாதுகாத்து மிக வேகமாகவும், மிகக் கவனத்துடனும், அதன்
உரிமையாளர்களுக்கு ஒப்படைப்பார்கள் ன்ற  எம்மீதுள்ள பெரு
நம்பிக்கை என்பதை நாம் அறிந்துள்ளதோடு அவர்கள் எம்மீது
வைத்துள்ள நம்பிக்கையை உயர் செயற் திறமையுடனும்,
நேர்மையுடனும், பாதுகாப்போம்......|| (உலக தபால் தின பிரதிக்ஞை)

 ஆதிமனிதன் இடம்பெயராமல் இருந்ததால் அவனுக்கு செய்திப் பரிமாற்றம ;அவசியப்படவில்லை. பின்னர் ஏற்பட்ட பல்வகையான காரணிகளின் நிமித்தம் மனிதன் இடம்பெயர ஆரம்பித்தான் ச்சமயம்தான் முதல்முதலாக செய்திப் பரிமாற்றத்தின் அவசியம் உணரப்பட்டது. செய்தியை தூர இடங்களுக்கு எடுத்துச் செ(h)ல்வதற்கு ஒரு சாதனம் தேவைப்பட்டது. இதற்காக ஆதிமனிதன் முதலில் ன் குரலையே அதி வேகத்துடன் ஒலி பரப்பினான். பின்ந் காலத்தில் பல்வகையான பொருட்களினால் விதவிதமான ஒலிகளை ஒழுப்பி ன் வேறுபட்ட செய்திகளை அறிவித்தான் அம்புவில் கண்டுபிடிக்கப்பட்ட பின்னர் அம்பில் தனது செய்தியை அனுப்பி வைத்தான் அதேசமயம் இரகசியமான செய்திகளை அடிமைகள் வாயிலாகச் சொல்லியனுப்ப ஆரம்பித்தான் எழுதப்படிக்க ஆரம்பித்த காலங்களில் செய்தி அனுப்பும் துறையில் பாரிய மாற்றங்கள் ஏற்பட்டன. இக்காலத்தில் புறாக்களும் வல்லூறுகளும் மற்றும் மிருகங்களும் கூட செய்தியை எடுத்துச் செல்லப்பயன்பட்டன. நீர்நிலைகள், கானகங்கள் கடந்து செல்வதற்குப் புறாக்கள் மிகவும் உதவியாக இருந்தன. பின்னர் போக்குவரத்திற்கான பாதைகள் ஏற்பட்ட காலத்தில் மனிதனே செய்தியை எடுத்துச்செல்ல ஆரம்பித்தான் ஒரு அடிமையின் தலையை மொட்டையடித்து தலையில் செய்தியை எழுதி மயிர் வளர்ந் பின் அவனைக் குறிப்பிட்ட இடத்திற்கு அனுப்பி அங்கு மீண்டும் மொட்டையடிக்கப்பட்டு செய்தி வாசிக்கப்பட்டது. பின்னர் ஓலைச்சுவடிகளில் எழுதப்பட்டு தூதுவனிடம் கொடுத்தனுப்பப்பட்டது. கிரேக்கர்களின் இராச்சியத்தில் வாழ்ந் மரத்தான் எனும் செய்திப்பிரிவு வீரன் ஒருத்தன் அவசரமான ஒரு யுத்தச் செய்தியை அறிப்பதற்காக இடைவிடாது 26 மைல்கள் தூரம் ஓடிச் சென்று செய்தியை அறிவித் பின் மூச்;சிரைத்து இறந்து போனான் இவனது தியாகம் காரணமாகவே சர்வதேச ஒலிம்பிக் போட்டிகளில் இன்றும் மரதன் “ஓட்டம் நடத்தப்படுகிறது.
தொடர்ந்து ஒரு மனிதனை ஓடச் செய்யாமல் குறிப்பிட்ட தூரத்திற்கொரு வீரனை நிறுத்தி செய்திகள் எழுதப்பட்ட குழலைப் பரிமாறும் உத்தி கண்டுபிடிக்கப்பட்ட பின் தகவல் பரிமாற்றம் எளிதாயிற்று. ஞ்சல் ஓட்டத்தின்” வரலாறு இதிலிருந்தே ஆரம்பிக்கின்றது. ந்; ஞ்சல் வீரர்கள் காடு, மலை, நீர்நிலைகள் கடந்து ஓடியே ஞ்ல் பரிமாற்றம் செய்தனர். பின்னர் தூர இடங்களுக்கு குதிரை வீரர்கள் ஞ்சல் செய்தனர். பொதுவாக உலக அஞ்சல் வரலாறு மேற்கண்டவாறு ஆரம்பித்தது.
இலங்கை அஞ்சல் துறை
எமது நாட்டைப் பொறுத்தவரையில் 1500 களில் ஆண்ட போர்த்துக்கேயர் காலத்திலும் 1600களில் ஆண்ட ஒல்லாந்தர் காலத்திலும், ஞ்சல் துறையில் போதிய வளர்ச்சிகளோ அபிவிருத்திகளோ காணப்படவில்லை. 1700களில் ஆங்கிலேயர் ஆட்சிக் காலத்திலேயே ஞ்சல்துறையில் துரித வளர்ச்சியும் அபிவிருத்தியும் நவீன தொடர்பாடல் உத்திகளும் ஏற்பட்டன. குறிப்பாக இலங்கையில் ஆங்கிலேயே கிழக்கிந்தியக் ம்பனியாரின் தகவல் பரிமாற் வசதிக்காக இலங்கைக்கும் இந்தியாவிற்குமிடையிலான ஒரு ஒழுங்கமைக்கப்படாத தபால்சேவை கெப்டன் . கென்னடி என்பவரால் ஏற்படுத்தப்பட்டது. அதன் பின்னர் 1804 தொடக்கம் 1817ம் ஆண்டுவரை ஞ்சல்துறையின் தலைமைப் பொறுப்பிலிருந் திரு. . பிளாட்டமன்; அவர்கள் 1815ல் நமது நாட்டில் கொழும்பு, காலி, மாத்தறை ,திருகோணமலை, யாழ்ப்பாணம், ன்னார் ஆகிய ஆறு இடங்களில் ஞ்சல் அலுவலகங்களை ஆரம்பித்தார். 1832ல் ஆசியாவிலேயே முதல் தடவையாக கொழும்புக்கும் கண்டிக்கும் இடையிலான குதிரைவண்டித் தபால் சேவை ஆரம்பிக்கப்பட்டது. 1838ல் இச்சேவை கொழும்புக்கும் காலிக்குமிடையில் விஸ்தரிக்கப்பட்டது. 1850ல் கொழும்புக்கும் காலிக்கும் இடையில் அவசர தபால்சேவை பழக்கப்பட்ட தபால் புறாக்கள் மூலம் அனுப்பப்பட்டது. 1857 ஏப்ரல் முதலாம் திகதி 6 பென்ஸ் பெறுமதியானதும் விக்டோரியா மகாராணியாரின் தலையுருவம் கொண்டதுமான முத்திரை வெளியிடப்பட் டது. (உலகின் முதல் முத்திரை இங்கிலாந்தில் 1840ல் ஒருபென்ஸ் பெறுமதியில் வெளியானது)
இலங்கையில் புகையிரதச் சேவை ந்ததன் பின்னர் முதல்தடவையாக 1865ல் கொழும்புக்கும் அம்பேபுஸ்ஸக்கும் இடையிலான தபால் புகையிரத சேவை உருவாக்கப்பட்டது. 1867ல் தனியாருக்கான தபால்பை,  தபால்பெட்டி சேவைகள் கொழும்பிலும் கண்டியிலும் ஆரம்பிக்கப்பட்டன. 1872 ஓகஸ்ட் 22ல் தான் முதன் முறையாக தபால் அட்டை வெளியானது. 1873ல் கொழும்புக்கும் இங்கிலாந்துக்குமிடையிலான காசுக்கட்டளை சேவை ஆரம்பிக்கப்பட்டது. 1877ல் உள்நாட்டு காசுக்கட்டளைச் சேவை ஆரம்பிக்கப்பட்டதிலிருந்தும்,  1877 ஏப்ரல் 1ம் திகதி இலங்கை அகிலதேச ஞ்சல் சங்கத்தில் ஒரு உறுப்பினராக இணைந்து கொண்டதிலிருந்தும், தபால்துறை துரித அபிவிருத்தி காணத் தொடங்கியது. 1880ல் இங்கை ந்திய காசுக்கட்டளை சேவை தொடங்கியது. 1885 மே 1ல் ஞ்சல் அலுவலக சேமிப்பு வங்கியும் ஆரம்பமானது. 1893ல் இலங்கை நாணயப் பெறுமதியில் இரண்டு சதம் பெறுமதியான முத்திரை வெளியிடப்பட்டது. 1895 ஓகஸ்ட் 19ம் திகதி கொழும்பு பிரதம ஞ்சல் அலுவலகம் ஆரம்பித்து வைக்கப்பட்டது.
பின்னர் 1913 தொடக்கம் 1923 வரை இலங்கையில் ஞ்சலதிபதியாக இருந்த திரு. எப்.ஜே. ஸ்மித் அவர்கள் முதல்முறையாக 6 உப தபால் அலுவலகங்களை அக்மீமன,  திவுலப்பிட்டிய, ஆனமடுவ, கிரியெல்ல,மூதூர்,  சிலாபத்துறை ஆகிய ஆறு இடங்களில் அமைத்தார். 1928ல் இலங்கையின்  முதலாவது வான் கடிதம் மாஸெல்ஸ் நகரத்திற்கு விமானத் தபால் வாயிலாகப் பறந்தது. 1936ல் அஞ்சல் அறிமுக அட்டை விநியோகம் செய்யப்பட்டதும்,  இலங்கிலாந்திலிருந்து நத்தார் தபால்கள் விமானம் மூலம் இலங்கையை அடைந்ததும் குறிப்பிடத்தக்கன.
1947 இலேயே இலங்கை நாட்டவர் ஒருவர் (திரு. .. பெரேரா) ஞ்சல் அதிபதியாக நியமனம் பெற்றார். இதனைத் தொடர்ந்து 1949ல் கொழும்புக்கும் யாழ்ப்பாணத்திற்கும் இடையில் வான் தபால்சேவை ஆரம்பித்தது. 1958ல் இலங்கை போக்குவரத்துச்சேவையுடன்  இணைந்து தபால் பஸ் சேவை தினமும் ஓடத் தொடங்கின. இதனால் இலங்கை மக்கள் அனைவருக்கும் தபால்சேவை தங்குதடையின்றிக் கிடைத்தன.
1967 ஜனவரி 1ல் இலங்கை முத்திரைப்பணியகம் ஸ்தாபிக்கப்பட்டது. செப்டம்பர் மாதம் முதல் முத்திரைக் கண்காட்சி மக்களுக்குக் காட்சிப்படுத்தப்பட்டது. 1972ல் முத்திரைகளை வெளியிடும் பணி முத்திரைப் பணியகத்திற்கு வழங்கப்பட்டது. 1975ல் அஞ்சல் அதிபர்களுக்கு பயிற்சி வழங்குவதற்காக வெள்ளவத்தையில் ஞ்சல் பயிற்சி நிலையம் ஆரம்பித்து வைக்கப்பட்டது. 1979ல் பிராந்தியங்கள் ரீதியாகத் தபால்தரம் பிரிக்கும் நிலையம் இரத்தினபுரியில் முதலாவதாக ஆரம்பிக்கப்பட்டதும் தபால்கள் விரைவாக மக்களைச் சென்றடைந்தன.
இதுவரை காலமும் ன்றாகவே கையாளப்பட்டு ந் தபால்துறையானது 1980 ஓகஸ்ட் 15ம் திகதி தபால் மற்றும் ந்திச்சேவை என இரண்டாகப் பிரிக்கப்பட்டு ந்திக்கு துரிதவசதிகள் செய்யப்பட்டன. 1981ல் ஞ்சல் முகவர் நிலையங்கள் அனுமதிக்கப்பட்டன. மேலும், 1989 ஒக்டோபர் 1ல் ஈஎம்எஸ். என்னும் விரைவுத் தபாற்சேவை ஆரம்பிக்கப்பட்டது. 1990 ஜுலை 2ல் ஸ்பீற் போஸ்ற் எனப்படும் அதிவிரைவுத் தபாற்சேவை பரீட்சார்த்தமாக ஆரம்பிக்கப்பட்டது. 1992ல் தபால் திணைக்களத்தில் மாகாண ரீதியிலான நிர்வாகப்பரவலாக்கம் ஏற்படுத்தப்பட்டதும் பிராந்திய ரீதியில் ஞ்சல் அறிமுக அட்டை வழங்கப்பட்டது. மேலும்  இதே ஆண்டு, தொலைநகல் (பெக்ஸ்) சேவைப் பரிமாற்றமும் தொடங்கியது. 1992ல் இதுவரை காலமும் ஞ்சலதிபர்களாக ஆண்கள் மட்டுமே கடமையாற்றிய நிலையிலிருந்து மாறி பெண்களும் ஞ்சல் அதிபர் சேவையில் நியமிக்கப்பட்டனர். 1994ல் கொழும்புக்கு வெளியே ஞ்சல் பொதி ஒப்படைப்பு நிலையம் ஆரம்பிக்கப்பட்டது. 1996ல் தபால் தரம்பிரிப்பை மேலும் இலகுவாக்கும் பொருட்டு ஒவ்வோர் ஊருக்கும் தபால் குறியீட்டு இலக்கம் அறிமுகப்படுத்தப்பட்டது. (உதாரணம் : சாய்ந்தமருது ஞ்சல் குறியீடு இலக்கம் (32280)  1999ல் தபால் திணைக்களம் கணிணிமயமாகத் தொடங்கியது.
2000ம் ஆண்டில் இலங்கையின் பலபாகங்களிலும் தபால்துறை கணிணியைப்பயன்படுத்த ஆரம்பித்தது. தொடர்ந்து  2001ல் இணையத்தளம், மின்ஞ்சல்,  ஒன்லைன் சேவை என தபால் திணைக்களத்தின் சகல செயற்பாடுகளும் அதிநவீன மின்னியல் உலகத்தினுள் பிரவேசித்தன. தற்போது அநேகமாக அனைத்து தபால் நிலையங்களிலும் ன்லைன் வாயிலாக மின் பட்டியல் கொடுப்பனவு,  வெளிநாட்டுக்கடிதங்களுக்கான ஒப்படைப்பு அறிவிப்பு இலத்திரனியல் காசுக்கட்டளைச் சேவை (ஈமணிஓடர்) தபால் பணப்பரிமாற்றச் சேவை (பீஎம்.ரீ) என்பன புதிதாக அறிமுகப்படுத்தப்பட்டு பொதுமக்களுக்கு துரிதகதியில் சேவையாற்றப்பட்டு வருகின்றன. ரெலிகொம் நிறுவனத்தின் முற்கொடுப்பனவு அட்டைகளும் விற்பனைக்குள்ளன.
அத்துடன் தற்போது இலங்கை முழுவதும்,  609 ஞ்சல் அலுவலகங்களும், 3440 உப தபால் நிலையங்களும்,  536 முகவர் தபால் நிலையங்களும், 46 தபால் கடைகளும் இயங்கி வருகின்றன. இவற்றில் திணைக்களத்தின் வழமையான சேவைகளாவன ஞ்சல் முத்திரை, முத்திரையிடப்பட் பொருட்கள்,  எழுதுகருவிகள், தொலைபேசி அழைப்புக்கள், பிரித்தானிய தபாற் கட்டளை, தொகை ஞ்சல் பொருட்கள் பாரமெடுத்தல், சமூகசேவைக் கொடுப்பனவுகள் (சயரோகம்,  தொழுநோய், புற்றுநோய், வறியவர்களுக்கான ஆதாரப் பணக் கொடுப்பனவுகள்), விவசாய மீன் பிடியாளர்களுக்கான ஓய்வூதியக் கொடுப்பனவு, பரீட்சைக்கட்டணம் வாகனத் தண்டப்பணம் செலுத்துதல், விரைவுத் தபாற்சேவை தபால் தேசிய சேமிப்பு வங்கிச் சேவைகள், தபால்பெட்டி மற்றும் தபால்பை சேவைகள், ந்திச்  சேவைகள் தொலைநகல், போட்டோ பிரதிகள், பதிவஞ்சல் மற்றும் சாதாரண கடிதச் சேவைகள், ள்நாட்டு வெளிநாட்டு பொதிச்சேவைகள், காப்புறுதிக்கடித சேவைகள், ஞ்சல் அறிமுக அட்டை, புதினப்பத்திரிகைகள் பதிவு செய்தல் என்பவற்றுடன் மேலும் பல நவீன காலத்திற்கு வேண்டிய புதிய பல சேவைகளும் ஆற்றப்பட்டு வருகின்றன.
புராதன காலத்திலிருந்து அதிநவீன காலம் வரை அனைத்துலக மக்களுக்கும் தனது ஈடினையற்றதும், அர்ப்பணிப்புமிக்கதுமான புனித சேவையை எவ்விதப்பாகுபாடுமின்றி ஆற்றிவரும் தபால்துறையினருக்காக உலக தபால் தினம் பிரதி வருடமும் ஒக்டோபர் 09ம் திகதி உலகம்முழுவதும் கொண்டாடப்பட்டு வருகின்றது.

மு.மு. அப்துல் முபாறக் (SPM, JP)
உப தபால் அலுவலகம்,ஆஸ்பத்திரி வீதி, சாய்ந்தமருது. #32280
077 6320657