Monday, September 28, 2015

படகு விபத்தில் மாலத்தீவு ஜனாதிபதி உயிர் தப்பினார் ஹஜ் பயணத்தை முடித்து நாடு திரும்பிக் கொண்டிருந்த போது சம்பவம்

படகு விபத்தில் மாலத்தீவு ஜனாதிபதி உயிர் தப்பினார்

ஹஜ் பயணத்தை முடித்து நாடு திரும்பிக் கொண்டிருந்த போது சம்பவம்

ஹஜ் பயணத்தை முடித்து நாடு திரும்பிக் கொண்டிருந்த போது படகு வெடித்து சிதறியதில், மாலத்தீவு ஜனாதிபதியும், அவரது மனைவியும் உயிர் தப்பினர்.
 இதுகுறித்து இந்தியாவுக்கான மாலத்தீவு தூதர் அகமது முகம்மது, டில்லியில் தெரிவித்திருப்பதாவது:
ஜனாதிபதி அப்துல்லா யாமீன் அப்துல் கயூம், அவரது மனைவி ஃபாத்திமா இப்ராஹிம் ஆகியோர் ஹஜ் பயணத்தை முடித்துக் கொண்டு, சவூதி அரேபியாவில் இருந்து வேகப் படகு மூலம் நாடு திரும்பிக் கொண்டிருந்தனர். அப்போது, திடீரென படகு வெடித்து சிதறியது.  அதில் ஜனாதிபதி எந்த வித காயமும் இன்றி உயிர்தப்பினார்.
 எனினும், அவரது மனைவிக்கு சிறிய அளவில் காயம் ஏற்பட்டது. அவர் டில்லியில் உள்ள இந்திரா காந்தி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். பெரிய அளவில் காயங்கள் எதுவம் இல்லை.

 படகு வெடிப்புக்கான காரணம் இதுவரை தெரியவில்லை. எனினும், இயந்திரக் கோளாறு காரணமாக இந்த விபத்து நிகழ்ந்திருக்கலாம் என சந்தேகிக்கப்படுகிறது என்று அகமது முகம்மது தெரிவித்துள்ளார்

No comments:

Post a Comment