Tuesday, September 29, 2015

மண்டையோடு இல்லாது முதல் பிறந்த நாளைக் கொண்டாடியுள்ள குழந்தை!

மண்டையோடு இல்லாது

முதல் பிறந்த நாளைக் கொண்டாடியுள்ள குழந்தை!


அமெரிக்காவில் வசிக்கிறார்கள் பிரான்டன் புல், பிரிட்டானி தம்பதியர். ஜாக்சன் ஸ்ட்ராங் என்ற தங்களது மகனின் முதல் பிறந்தநாளை மகிழ்ச்சியோடு கொண்டாடியிருக்கிறார்கள்.
ஜாக்சனைப் பார்த்து மருத்துவ உலகமே வியப்பில் ஆழ்ந்தி ருக்கிறது. பிரிட்டானி கருவுற்றிருந்தபோது, பரிசோதனையில் ஆன்என்செபலி (Anen cephaly) என்ற மண்டை யோடு குறைபாட்டுடன் குழந்தை இருந்தது கண்டு பிடிக்கப்பட்டது. மண்டை யோடும் பெருமூளை வளர்ச்சியும் இல்லாத குழந்தை என்பதால் 23 வாரங்களில் கருக்கலைப்பு செய்யச் சொன்னார்கள் மருத்துவர்கள்.
ஒருவேளை குழந்தை பிறந்தாலும் ஓரிரு வாரங்களில் மரணம் அடைந்துவிடும் என்றும் எச்சரித்தார்கள். பிரான்டனும் பிரிட்டானியும் கலந்து ஆலோசித்தார்கள். இறுதியில் குழந்தையைப் பெற்றுவிடத் தீர்மானித்தார்கள். ‘‘குழந்தை எவ்வளவு குறைபாட்டுடன் இருந்தாலும் அது எங்கள் குழந்தைதான். அதனால் குழந்தையைப் பெற்றுக்கொள்வதில் உறுதியுடன் இருந்தோம். குழந்தை நலமாகப் பிறந்தான். பாதி மண்டை மட்டும்தான் இல்லை.

குழந்தையைப் பார்ப்பவர்கள் எவ்வளவு நாள் தாங்கும் என்று எங்களிடமே இரக்கமற்ற முறையில் சொல்வார்கள். எதையும் காதில் வாங்கிக்கொள்ளாமல் ஒவ்வொரு நாளும் எங்கள் மகன் பிழைத்திருக்க வேண்டும் என்று பிரார்த்தனை செய்தபடி வளர்த்தோம். இதோ முதல் பிறந்தநாளைக் கொண்டாடிவிட்டான் ஜாக்ஸன்’’ என்கிறார் பிரான்டன். அமெரிக்காவில் 4900 குழந்தைகளில் ஒருவருக்கு இந்த மண்டையோடு பாதிப்பு குறைபாடு இருக்கிறது. அந்தக் குழந்தைகள் கருவிலேயோ, பிறந்த சில நாட்களிலேயோ உயிரிழந்துவிடுகின்றன. ஜாக்சன் மட்டுமே இதுவரை இருந்துவந்த கற்பிதங்களைத் தகர்த்தெறிந்திருக்கிறான்.

No comments:

Post a Comment