Wednesday, November 25, 2015

துனீசியாவில் பஸ்ஸில் குண்டு வெடிப்பு ஜனாதிபதியின் பாதுகாவலர்கள் 13 பேர் பலி ஐ.எஸ்.அமைப்பு பொறுப்பேற்றுள்ளதாகத் தெரிவிப்பு


துனீசியாவில் பஸ்ஸில் குண்டு வெடிப்பு

ஜனாதிபதியின் பாதுகாவலர்கள் 13 பேர் பலி

ஐ.எஸ்.அமைப்பு பொறுப்பேற்றுள்ளதாகத் தெரிவிப்பு


துனீசியாவில், ஜனாதிபதி பெஜி கெய்த் ùஸப்ஸியின்(President Beji Caid Essebsi )பாதுகாவல் படையினரை ஏற்றிச் சென்ற பஸ்ஸில் கடந்த செவ்வாய்க்கிழமை தற்கொலை குண்டுதாரியினால்  நிகழ்த்தப்பட்ட குண்டு வெடிப்பில் 13 பேர் பலியாகினர்.
 இதையடுத்து அந்த நாட்டில்  30 நாட்களுக்கு நெருக்கடி நிலை பிரகடனம் செய்யப்பட்டுள்ளது.
 இதுகுறித்து பாதுகாப்புப் படை வட்டாரங்கள் தெரிவித்ததாவது:
ஜனாதிபதியின் பாதுகாவலர்கள் சென்று கொண்டிருந்த பஸ், துனீஸ் நகரின் முகம்மது அவென்யூ பகுதி வழியாக செவ்வாய்க்கிழமை இரவு சென்று கொண்டிருக்கையில், அதில்  குண்டு வெடித்தது.
 இதில், அந்தப் பஸ்ஸிலிருந்த 13 பேர் உயிரிழந்தனர். 20 பேர் காயமடைந்தனர்.
 இந்தச் சம்பவத்துக்கு  ஐ.எஸ் அமைப்பு பொறுப்பேற்றுள்ளதாக பிந்திய செய்திகள் தெரிவித்துள்ளன.. தற்கொலை குண்டுதாரியின் உடலும் கண்டுபிடிக்கப்ப்ட்டதாகவும் அறிவிக்கப்படுகின்றது.
 இந்தத் தாக்குதலையடுத்து துனீசியாவில் நெருக்கடி நிலை பிரகடப்படுத்தப்பட்டுள்ளது.
 இதுகுறித்து தொலைக்காட்சியில் உரையாற்றிய ஜனாதிபதி  பெஜி கெய்த் ùஸப்ஸி கூறியதாவது:
 தலைநகரில் நடைபெற்றுள்ள பஸ் தாக்குதல் மிகவும் துயரத்துக்குரியது. அந்தச் சம்பவத்தைத் தொடர்ந்து, நிலைமையை கட்டுக்குள் கொண்டு வருவதற்காக நாட்டில் 30 நாட்களுக்கு நெருக்கடி நிலை அறிவிக்கப்படுகிறது இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்..
 துனீசியாவில் நீண்ட காலம் சர்வாதிகார ஆட்சி நடத்தி வந்த எல் அபிடைன் பென் அலி, மக்கள் புரட்சியின்மூலம் 2011-ஆம் ஆண்டு பதவியிலிருந்து நீக்கப்பட்டார்.
 அதிலிருந்து, அந்த நாட்டில் தொடர்ந்து பயங்கரவாதத் தாக்குதல்கள் நிகழ்த்தப்பட்டு வருகின்றன.





No comments:

Post a Comment