Thursday, November 26, 2015

அம்பாறை மாவட்ட மக்களுக்கு வழங்கப்பட்ட வாக்குறுதிகள் வரவு – செலவுத் திட்ட்த்தில் நிறைவேற்றப்படவில்லை முன்னாள் அமைச்சர் ஏ.ஆர்.மன்சூர்

அம்பாறை மாவட்ட மக்களுக்கு வழங்கப்பட்ட வாக்குறுதிகள்

வரவு – செலவுத் திட்ட்த்தில் நிறைவேற்றப்படவில்லை

முன்னாள் அமைச்சர் ஏ.ஆர்.மன்சூர்


ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன கல்முனை கடற்கரை மைதானத்தில் திரண்டிருந்த மக்களைப் பார்த்து தனது அரசியல் வாழ்க்கையில் இதுபோன்ற சனத்திரளை பார்க்கவில்லை எனத் தெரிவித்த்துடன் அவர் சென்ற இடமெல்லாம் இம்மக்கள் கூட்டத்தை சிலாகித்துப் பெசினார்.
இக்கூட்ட்த்தில் கிழக்கு மாகாணத்தில் மட்டக்களப்பு தொடக்கம் பொத்துவில் வரையிலான ரயில் பாதை விஸ்தரிப்பை மேற்கொள்ளப் போவதாகவும் அதற்கான நிதியை வரவு செலவுத் திட்ட்த்தில் ஒதுக்குவதாகவும் வாக்குறுதி அளித்திருந்தார். அந்த மக்களுக்கு வழங்கப்பட்ட அந்த வாக்குறுதி நிறைவேற்றப்படவில்லை.
இது போன்று பிரதமர் ரணில் விக்ரமசிங்க கல்முனை சந்தாங்க்கேணி மைதானத்தில் இடம்பெற்ற கூட்ட்த்தில் கல்முனை அபிவிருத்திக்கென தனியான அதிகார சபை ஒன்றை அமைத்து தருவதாக வாக்குறுதி அளித்தார்.

ஆனால், தென்பகுதி மக்களைத் திருப்திபடுத்துவதற்காக தெற்கு அதிகார சபை ஒன்றை அமைத்துக் கொடுத்துள்ளார். இதுவும் கல்முனைப் பிரதேச மக்களை ஏமாற்றும் செயல்பாடாகும்

No comments:

Post a Comment