Monday, November 23, 2015

அம்பாறை மாவட்ட மக்களுக்கு கெளரவம்! அமைச்சர் றிஷாத் பதியுதீனுக்கு பாராட்டு!!

அம்பாறை மாவட்ட மக்களுக்கு கெளரவம்

அமைச்சர் றிஷாத் பதியுதீனுக்கு பாராட்டு



இலங்கை அரச வர்த்தக கூட்டுத்தாபனத்தின் (STC) தலைவராக .எம்.ஜெமீல் அவர்களையும்  லக்சல நிறுவனத்தின் தலைவராக எஸ்.எம்.எம்.இஸ்மாயில் அவர்களையும் கிரபைட் நிறுவனத்தின் தலைவராக .எம்.மஜீத் அவர்களையும்  நியமனம் செய்து அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் தேசியத் தலைவரும் வர்த்தக, கைத்தொழில் அமைச்சருமான  றிஷாத் பதியுதீன் அவர்கள் அம்பாறை மாவட்ட மக்களுக்கு கெளரவம் தந்துள்ளார் என இம்மாவட்ட மக்கள்  அமைச்சர் றிஷாத் பதியுதீனுக்கு  பாராட்டு தெரிவித்துள்ளார்கள்.
முஸ்லிம் காங்கிரஸின் ஸ்தாபகத் தலைவரான மர்ஹும் எம்.எச்.எம். அஷ்ரஃப் அவர்கள் அம்பாறை மாவட்டத்தைச் சேர்ந்த றபீக் அவர்களை துறைமுகங்கள் மற்றும் கப்பல்துறை கூட்டுத்தாபனத்தின் தலைவராக அன்று  நியமித்து கிழக்கு மாகாண மக்களுக்கு. கெளரவம் கொடுத்திருந்ததை இம்மாவட்ட மக்கள் நினைவுபடுத்தி அன்னாருக்குப் பின் அப்படியான கெளரவத்தை அமைச்சர் றிஷாத் பதியுதீன் அம்பாறை மாவட்ட மக்களுக்கு தற்போது வழங்கியுள்ளதாகக் கூறி நன்றியும் வெளியிட்டு வருகிறார்கள்.
கட்சிக்கு வாக்களிப்பதற்கு அம்பாறை மாவட்ட மக்கள் பதவிகள் வழங்கப்படுவதற்கு வேறு மாவட்ட பிரமுகர்களா? என்றும் அம்பாறை மாவட்டத்தைச் சேர்ந்த முஸ்லிம் காங்கிரஸ் கட்சியின் செயலாளர் நாயகம் எம்.ரி. ஹஸனலி அவர்கள், சட்டத்தரணி நிஸாம் காரியப்பர் அவர்கள் ஆகியோர்களை தேசியப் பட்டியலில் பெயரிட்டு வேறு மாவட்ட பிரமுகர்களை தேசியப்பட்டியல் மூலம்  நடாளுமன்ற உறுப்பினர் பதவிகள் வழங்கப்பட்டிருக்கும் அம்பாறை மாவட்ட மக்களுக்கு எதிரான கட்சித் தலைவரின் செயல்பாட்டை மக்கள் ஆதாரம் காட்டுகின்றனர்.

இது மாத்திரமல்லாமல் கண்டி மாவட்டத்தைச் சேர்ந்த முஸ்லிம் காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த ஒரு மாகாண சபை உறுப்பினர் ஜனாதிபதி தேர்தல் காலத்தில் கட்சிக்கு எதிராகச் செயல்பட்டதும் அல்லாமல்முஸ்லிம் காங்கிரஸ் தலைவர் பொது பல சேனா ஆட்சி அமைத்தால் கூட அவர்களுடனும் சேர்ந்து அமைச்சுப் பதவியை எடுத்துக் கொள்வார்என்று கூறியிருந்தும் அவர் இதுவரையும் கட்சியிலிருந்து நீக்கப்படவில்லை.
ஆனால், அம்பாறை மாவட்டத்தைச் சேர்ந்த .எம்.ஜெமீல் அவர்கள் தனது பிறந்த ஊரான சாய்ந்தமருது மக்களின் நீண்ட கால விருப்பமான தனியான உள்ளூராட்சி மன்றக் கோரிக்கையை மக்கள் சார்பாக கட்சியின் தலைமைக்கு முன் வைத்தமைக்காக ஜெமீல் அவர்களுக்கு எதிராக பல அவதூறுகளைக் கூறி அவர் சடுதியாகக் கட்சியிலிருந்து நீக்கப்பட்டதையும் கூறி முஸ்லிம் காங்கிரஸ் கண்டிக்கு ஒரு தீர்மானம் அம்பாறைக்கு ஒரு தீர்மானம் எடுக்கின்றதா எனக் கேட்பதுடன் கவலையும் தெரிவித்துள்ளனர்.



No comments:

Post a Comment