Friday, December 4, 2015

எகிப்தில் கேளிக்கை விடுதியில் பெட்ரோல் குண்டு வீச்சு கூட்ட நெரிசலில் சிக்கி 16 பேர் உயிரிழப்பு

எகிப்தில் கேளிக்கை விடுதியில் பெட்ரோல் குண்டு வீச்சு

கூட்ட நெரிசலில் சிக்கி 16 பேர் உயிரிழப்பு

எகிப்தின் தலைநகர் கெய்ரோவுக்கு அருகில் உள்ள அகவுசா என்ற மாவட்டத்தில் இரவு நேர கேளிக்கை விடுதியில் பெட்ரோல் குண்டு வீசியதால் விடுதியில் இருந்த அனைவரும் உயிரை காத்துக்கொள்ள அங்கிருந்து அலறி அடித்துக்கொண்டு ஓடியதில் நெரிசலில் சிக்கி 16 பேர் உயிரிழந்துள்ளனர் மேலும் பலர் படுகாயம் அடைந்துள்ளனர்
இந்த இரவு நேர கேளிக்கை விடுதிக்குள் மோட்டார்சைக்கிளில் வந்த 3 நபர்கள் திடீரென பெட்ரோல் குண்டுகளை வீசியதால் இந்த அனர்த்தம் ஏற்பட்டுள்ளதாக அறிவிக்கப்படுகின்றது.

வீசப்பட்டபெட்ரோல் குண்டுகள் பயங்கர சத்தத்துடன் வெடித்து சிதறியது. இதனால் கண் இமைக்கும் நேரத்தில் கேளிக்கை விடுதி முழுவதும் தீ பரவியது. உடனடியாக அனைவரும் உயிரை காத்துக்கொள்ள அங்கிருந்து அலறி அடித்துக்கொண்டு ஓடினர். இதனால் அங்கு கூட்ட நெரிசலும் ஏற்பட்டது. இந்த கோர விபத்தில் சிக்கி 16 பேர் உயிரிழந்தனர். மேலும் பலர் படுகாயம் அடைந்தனர். அவர்கள் அனைவரும் அருகில் உள்ள மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர் எனத் தெரிவிக்கப்படுகின்றது..



No comments:

Post a Comment