Friday, December 4, 2015

பாராளுமன்ற அலுவல்கள் மற்றும் ஊடகத்துறை பிரதி அமைச்சராக கருணாரத்ன பரணவித்தாரன சத்தியப்பிரமாணம்

பாராளுமன்ற அலுவல்கள் மற்றும் ஊடகத்துறை

பிரதி அமைச்சராக கருணாரத்ன பரணவித்தாரன

சத்தியப்பிரமாணம்

பாராளுமன்ற அலுவல்கள் மற்றும் ஊடகத்துறை பிரதி அமைச்சராக கருணாரத்ன பரணவித்தாரன இன்று 04 ஆம் திகதி வெள்ளிக்கிழமை முற்பகல் ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேன முன்னிலையில் சத்தியப்பிரமாணம் செய்து கொண்டார். பாராளுமன்றத்தில் அமைந்துள்ள ஜனாதிபதி அலுவலகத்தில் இந்நிகழ்வு இடம்பெற்றது.
கருணாரத்ன பரணவித்தாரன, இதற்கு முன்னர் உள்ளூராட்சி மற்றும்  மாகாண சபைகள் பிரதி அமைச்சராக பணியாற்றினார்.
இந்நிகழ்வில் ஜனாதிபதியின் செயலாளர் பி.பீ.அபேகோன் அவர்களும் பங்குபற்றினார்.

No comments:

Post a Comment