Sunday, January 31, 2016

அரசாங்கத்திற்கு எதிராக பாத யாத்திரை மஹிந்த அணி தயாராகின்றது!

அரசாங்கத்திற்கு எதிராக பாத யாத்திரை

மஹிந்த அணி தயாராகின்றது!


முன்னாள் ஜனாதிபதியும் நாடாளுமன்ற உறுப்பினருமான மஹிந்த ராஜபக்ஸவுக்கு ஆதரவான தரப்புக்கள், அரசாங்கத்திற்கு எதிராக பாத யாத்திரையொன்று செல்லவுள்ளதாக அறிவிக்கப்படுகின்றது.
அரசாங்கம் 68 ஆவது தேசிய சுதந்திர தின நிகழ்வுகளை இவ்வாண்டு கொழும்பு காலி முகத்திடலில் நடாத்த உள்ளது.
இந்த நிகழ்வுகளை சீர்குலைக்கும் நோக்கில் மஹிந்த தரப்பு எதிர்வரும் 3ம் திகதி பாத யாத்திரை செல்லவுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.
விஹாரமஹாதேவி பூங்காவுக்கு அருகாமையில் அமைந்துள்ள புத்தர் சிலைக்கு எதிரில் ஆரம்பாகும் பாத யாத்திரை, ஜனாதிபதி செயலகம் வரையில் சென்று மகஜர் ஒன்றை ஒப்படைக்க உள்ளனர்.
இந்த மகஜரை எவரும் ஏற்றுக்கொள்ள முன்வராவிட்டால் அந்த இடத்தில் அதிஸ்டான பூஜையொன்றை நடாத்த திட்டமிடப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.
கடந்த வாரத்தில் நாரஹென்பிட்டி அபாயாரமயவில் வைத்து விஹாரையின் பீடாதிபதி முரத்தட்டுவே ஆனந்த தேரரினால் இந்த போராட்டம் திட்டமிடப்பட்டுள்ளதாகவும் கூறப்படுகின்றது.

இந்தப் போராட்டத்தில் பௌத்த பிக்குகளும் பொது மக்களும் பங்கேற்க உள்ளதாக பொலிஸாருக்கு தகவல் கிடைத்துள்ளதாக சிங்கள ஊடகம் ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது.

No comments:

Post a Comment