Sunday, January 31, 2016

பிரபலமாகியுள்ள பீகொக் மாளிகையை 45 கோடி ரூபாவுக்கு விற்பனை செய்யும் முயற்சியில் லியனகே!

பிரபலமாகியுள்ள பீகொக் மாளிகையை 45 கோடி ரூபாவுக்கு

விற்பனை செய்யும் முயற்சியில் லியனகே!


தற்போது மிகவும் பிரபலமாகிவிட்ட பீகொக் மாளிகையை விற்பனை செய்யத் தீர்மானித்திருப்பதாக குறித்த மாளிகையின் உரிமையாளரும்,பிரபல வர்த்தகருமான ஏ.எஸ்.பீ.லியனகே தெரிவித்துள்ளார்.
கடந்த சில நாட்களாக ஊடகங்களில் மிகவும் பிரபலமாக பேசுவதற்கு காரணம் இந்த பீகொக் மாளிகையில் நாடாளுமன்ற உறுப்பினர் மஹிந்த ராஜபக்ஸ பெருமளவு தங்கத்தினை மறைத்து வைத்துள்ளதாக குறிப்பிடப்பட்டமையே ஆகும்.
எனினும் கடந்த வாரம் இந்த வீட்டில் அமைந்துள்ள நீச்சல் தடாகத்தில் நிரப்பப்பட்டிருந்த  மணல் அப்புறப்படுத்தப்பட்ட போது அங்கு எவ்வித தங்கமும் இல்லாத நிலையில் இரண்டு மண்பானைகள், பாதணிகள் மட்டுமே மீட்கப்பட்டன.
மணல் அகழ்விற்காக தான் ஒரு இலட்சத்திற்கும் அதிகமான பணத்தை செலவிட்டுள்ளதாக லியனகே  தெரிவித்துள்ளார். இந்நிலையில் குறித்த மாளிகையை விற்பனை செய்யத் தீர்மானித்திருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த மாளிகையை 45 கோடி ரூபாவுக்கு விற்பனை செய்ய தான் தீர்மானித்திருப்பதாக லியனகே மேலும் தெரிவித்துள்ளார் எனவும் கூறப்படுகின்றது.

No comments:

Post a Comment