Monday, February 1, 2016

வர்ணச் சாயம் பூசி கலப்படம் செய்யப்பட்ட சிவப்பு அரிசி வியாபார நிலையங்களில் விற்பனை செய்யப்படுவதாக மக்கள் புகார்!

வர்ணச் சாயம் பூசி கலப்படம் செய்யப்பட்ட சிவப்பு அரிசி

வியாபார நிலையங்களில் விற்பனை செய்யப்படுவதாக

மக்கள் புகார்!

 சிவப்பு நிற கலவை கலந்த சிவப்பு அரிசி நாட்டின் பெரும்பாலான பிரதேசங்களிலுள்ள வியாபார ஸ்தலங்களில் விற்பனைக்கு வைக்கப்பட்டுள்ளதாக சிவப்பு அரிசியைக் கொள்வனவு செய்யும் பொதுமக்கள் புகார் தெரிவித்துள்ளனர்.
சிவப்பு வர்ணச் சாயம் பூசி கலப்படம் செய்யப்பட்ட சிவப்பு அரிசி குறிப்பாக மலையக பகுதியிலுள்ள வியாபார ஸ்தலங்களில் உள்ளதாகவும் இவ்வாறு சாயம் பூசி நூதன முறையில் வியாபார நிலையங்களில் விற்பனை செய்யப்படுவதை தடுக்க வேண்டுமென பொது மக்கள் சம்மந்தப்பட்ட அதிகாரிகளிடம் கோரிக்கை விடுத்துள்ளனர்.
கல்முனை, அம்பாறை, சம்மாந்துறை, மட்டக்களப்பு ஆகிய பகுதிகளிலிருந்து மொத்தமாக விற்பனைக்கு வரும் இந்த அரிசி மூடைகளிலேயே இவ்வாறு கலப்படம் செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
வர்ணச் சாயம் பூசி கலப்படம் செய்யப்பட்ட அரிசி மாதிரிகள் சந்தையில் உள்ளதா என்பது குறித்து நுகர்வோர் பாதுகாப்பு அதிகார சபை அதிகாரிகள் சந்தையில் திடீர் சோதனை செய்து அரிசி மாதிரிகளை பெற்று பரிசோதனை நடத்துமாறு பொது மக்கள் கோரிக்கை விடுக்கின்றனர்.




No comments:

Post a Comment