Monday, February 1, 2016

ஊழல் மோசடி ஆணைக்குழு முன்னிலையில் முன்னாள் ஜனாதிபதியின் பாரியார் ஷிரந்தி ராஜபக்ஸ ஆஜர்

ஊழல் மோசடி ஆணைக்குழு முன்னிலையில்
முன்னாள் ஜனாதிபதியின் பாரியார் ஷிரந்தி ராஜபக்ஸ ஆஜர்

முன்னாள் ஜனாதிபதியும் நாடாளுமன்ற உறுப்பினருமான மஹிந்த ராஜபக்ஸவின் பாரியார் ஷிரந்தி ராஜபக்ஸ பாரிய ஊழல் மோசடி தொடர்பில் விசாரணை செய்யும் ஜனாதிபதி ஆணைக்குழு முன்னிலையில் சற்றுமுன்னர் ஆஜராகியுள்ளார்.
கடந்த அரசாங்கத்தில் ஊடக ஆலோசகராக செயற்பட்ட ஒருவருக்கு குறைந்த மதிப்பீட்டில் வீடொன்று பெற்றுக் கொடுக்கப்பட்டுள்ளதாக, தேசிய வீடமைப்பு அதிகார சபையினால் முன்வைக்கப்பட்டுள்ள முறைப்பாடு குறித்தே ஷிரந்தி ராஜபக்ஸடம் வாக்குமூலம் பதிவு செய்யப்படவுள்ளது.

கஹதுடுவ பிரதேசத்திலுள்ள குறித்த வீடு 5 இலட்சம் என குறிப்பிடப்பட்டுள்ள போதிலும் அந்த வீட்டின் உண்மை பெறுமதி 55 இலட்சம் ரூபா என மதிப்பீடு செய்யப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.


No comments:

Post a Comment