Monday, February 1, 2016

ராமர் தனது மனைவி சீதையை தண்டித்தது அநீதியானது: ராமர் அவரது தம்பி லட்சுமண் இருவர் மீதும் தக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்! பிகார் நீதிமன்றத்தில் இப்படியும் ஒரு வழக்கு!!

ராமர் தனது மனைவி சீதையை தண்டித்தது அநீதியானது:

ராமர் அவரது தம்பி லட்சுமண் இருவர் மீதும் தக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்!

பிகார் நீதிமன்றத்தில் இப்படியும் ஒரு வழக்கு!!


ராமர் தனது மனைவி சீதையைத் தண்டித்தது அநீதியானது என்று இந்தியாவிலுள்ள பிகார் மாநிலம் பாட்னா நீதிமன்றத்தில் வழக்கு ஒன்று தொடுக்கப்பட்டுள்ளது.
இந்த புதுமையான வழக்கை பீகார் மாநிலம் சீதாமார்ஹி மாவட்டத்தைச் சேர்ந்த தாக்கூர் சந்தன் சிங் என்ற வழக்கறிஞர் தொடுத்துள்ளார்.
வழக்கறிஞர் தனது மனுவில் கூறியுள்ளதாவது:
கடவுள் ராமர், தனது மனைவி சீதையை, இலங்கையிலிருந்து மீட்டு வந்த பின்னர் கைவிட்டு விட்டார். இந்த முடிவை அவர் சலவைத் தொழிலாளி ஒருவர் சீதை குறித்துப் பேசியதை அடிப்படையாக வைத்து எடுத்துள்ளார். இந்த முடிவு அநீதியானது. முறையாக விசாரிக்காமல், குற்றச்சாட்டை தெளிவுபடுத்திக் கொள்ளாமல் தன்னிச்சையாக முடிவெடுத்து தனது மனைவியைத் தண்டித்துள்ளார்
ராமரின் செயலுக்கு அவரது தம்பி லட்சுமணும் உடந்தையாக இரு்துள்ளார். உண்மைகளை அறியாமல் லட்சுமண், தனது அண்ணி சீதைய அவமதித்துள்ளார். இருவர் மீதும் தக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அந்த மனுவில் கூறியுள்ளார்.

இந்த மனுவை என்ன செய்வது என்று நீதிமன்றம் விசாரித்து முடிவை அறிவிக்கவுள்ளதாக கூறப்படுகிறது.

No comments:

Post a Comment