Monday, February 1, 2016

இன்று வெளியிடப்பட்டுள்ள ஐசிசி டி20 தரவரிசை: விராட் கோலிக்கு முதலிடம்!

இன்று வெளியிடப்பட்டுள்ள ஐசிசி டி20 தரவரிசை:

விராட் கோலிக்கு முதலிடம்!

இன்று வெளியிடப்பட்டுள்ள ஐசிசி டி20 பேட்ஸ்மேன்களுக்கான தரவரிசையில், இந்தியாவின் விராட் கோலி, முதலிடத்தைப் பிடித்துள்ளார். இந்த தரவரிசைப்பட்டியலில் இலங்கை வீரர் (Kusal Perera) குசல் பெரேரா 10 ஆவது இடத்தில் உள்ளார்.
ஆஸ்திரேயாவுக்கு எதிரான டி20 தொடரில் கோலி, 199 ஓட்டங்கள் எடுத்து, தொடர் நாயகன் விருதைப் பெற்றார். அதனையடுத்து ஐசிசி டி20 பேட்ஸ்மேன்களுக்கான தரவரிசையில், முதலிடத்தில் இருந்த ஆஸ்திரேலியாவின் ஆரோன் ஃபிஞ்ச்-சைப் பின்னுக்குத் தள்ளி கோலி முதலிடம் பெற்றுள்ளார்.

ஆஸ்திரேலியாவுக்கு எதிரான 3-ஆவது மற்றும் கடைசி டி20 கிரிக்கெட் ஆட்டத்தில் 7 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி கண்டது இந்தியா. இதன்மூலம் 3 போட்டிகள் கொண்ட இந்தத் தொடரை 3-0 என கைப்பற்றிய இந்திய அணி, ஆஸ்திரேலியாவை அதன் சொந்த மண்ணில் ஒயிட் வாஷ் ஆக்கியிருக்கிறது.

No comments:

Post a Comment