Thursday, February 25, 2016

சமூர்த்தி சேவையாளர்கள், அரச விவசாய சங்க ஊழியர்கள் கொழும்பில் இன்று பாரிய ஆர்ப்பாட்டம்

சமூர்த்தி சேவையாளர்கள் + அரச விவசாய சங்க ஊழியர்கள்

கொழும்பில் இன்று பாரிய ஆர்ப்பாட்டம்

சமூர்த்தி சேவையாளர்கள், அரச விவசாய சங்க ஊழியர்கள் மற்றும் பல சங்க ஊழியர்கள் இணைந்து இன்று  பாராளுமன்ற சுற்று வட்டாரமான பொல்துவ சந்தியில் பாரிய ஆர்ப்பாட்டமொன்று முன்னெடுக்கப்பட்டது.
சமூர்த்தி அபிவிருத்தி சங்க தலைவர் ஜகத் குமார தாக்கப்பட்டதை வன்மையாக கண்டித்தும் இந்த ஆர்ப்பாட்டத்தை முன்னெடுத்ததாக ஆர்ப்பாட்டக்காரர்கள் இதன்போது தெரிவித்துள்ளனர்.
இதன்போது, ஆர்ப்பாட்டக்காரர்களால் பல கோரிக்கைகள் முன்வைக்கப்பட்டுள்ளன.
தமது தொழிலுக்கு பிரச்சினை ஏற்பட்டுள்ளதாகவும், தமக்கு வழங்கப்பட வேண்டிய கொடுப்பனவுகள் இடைநிறுத்தப்பட்டுள்ளதாகவும் அதனை மீள தருமாறும் தமது கோரிக்கையில் முன்வைத்துள்ளனர்.
அத்துடன், விவசாய மற்றும் ஏனைய சங்க ஊழியர்களும் தமது தொழில்களில் உள்ள பிரச்சினைகளை தீர்க்குமாறும் இதன் போது வலியுறுத்தியுள்ளனர்.

இதேவேளை, தமது உரிமைகளை பெற தொடர்ந்தும் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபடுவோம் எனவும் அவர்கள் இதன்போது தெரிவித்துள்ளனர்.





No comments:

Post a Comment