Thursday, April 28, 2016

ஜனாதிபதி செயலகத்திற்குள் உட்பிரவேசிக்க முயற்சி ஆர்ப்பாட்ட மாணவர்கள் மீது கண்ணீர்ப்புகை மாணவர்கள் பலத்த காயம்

ஜனாதிபதி செயலகத்திற்குள் உட்பிரவேசிக்க முயற்சி

ஆர்ப்பாட்ட மாணவர்கள் மீது கண்ணீர்ப்புகை
மாணவர்கள் பலத்த காயம்

கொழும்பு பல்கலைக்கழக மருத்துவ பீட மாணவர்களால் இன்று முன்னெடுக்கப்பட்டிருந்த ஆர்ப்பாட்டத்தின் மீது பொலிஸார் கண்ணீரப்புகை மற்றும் நீர்த்தாரை பிரயோகத்தை மேற்கொண்டுள்ளனர்.
இவர்கள் ஜனாதிபதி செயலகத்திற்குள் உட்பிரவேசிக்க முயற்சித்த போதே இந்தத்தாக்குதல் மேற்கொள்ளப்பட்டுள்ளது.
இதன்போது அனைத்து மாணவர்களும் கடுமையாக தாக்கப்பட்டதுடன் இதில் காயமடைந்த இரு மாணவர்களை வைத்தியசாலைக்கு கொண்டு சென்றுள்ளதாகவும் அறிவிக்கப்படுகின்றது..

மாணவர்கள் நடாத்திய சத்தியாக்கிரகப் போராட்டத்திற்கு 100 நாட்கள் கடந்த நிலையிலும் அரசு இவர்களுக்கு எந்தத் தீர்வையும் பெற்றுக்கொடுக்கவில்லை என்பதனாலேயே இந்த ஆர்ப்பாட்டத்தை முன்னெடுத்திருந்ததாக மாணவர்கள் தெரிவித்துள்ளார்கள்.



No comments:

Post a Comment