Tuesday, May 31, 2016

லலித், ஜயந்த, நிஸ்ஸங்க, நலினிடம் இன்று விசாரணை

லலித், ஜயந்த, நிஸ்ஸங்க, நலினிடம் இன்று விசாரணை



முன்னாள் ஜனாதிபதியின் செயலாளர் லலித் வீரதுங்க இன்று பொலிஸ் நிதிமோசடிப் பிரிவின் விசாரணைக்காக ஆஜராகியுள்ளார்.
கடந்த ஆட்சியின் போது ஜனாதிபதி செயலகத்தில் இடம்பெற்ற வாகன பயன்பாட்டு மோசடி தொடர்பான விசாரணைக்காகவே அவர் பொலிஸ் நிதிமோசடிப் பிரிவிற்கு அழைக்கப்பட்டுள்ளார்.
முன்னாள் ஜனாதிபதி மஹிந்தவின் ஆட்சிக்காலத்தில் சுமார் 150 வாகனங்கள் ஜனாதிபதி செயலகத்திலிருந்து சட்டவிரோதமான முறையில் வேறு நபர்களின் பயன்பாட்டுக்கு வழங்கப்பட்டிருந்தது.
முன்னாள் பிரதியமைச்சர் சஜின் வாஸ் குணவர்த்தனவும் இது தொடர்பாக குற்றம் சாட்டப்பட்டிருந்ததுடன், அதற்காக விளக்கமறியலிலும் வைக்கப்பட்டிருந்தார்.
இந்நிலையில் குறித்த விவகாரம் தொடர்பில் இன்று லலித் வீரதுங்க விசாரணைக்காக அழைக்கப்பட்டுள்ளார்.
முன்னாள் ஜனாதிபதியின் செயலாளர் என்ற வகையில் ஜனாதிபதி செயலகத்தின் நிர்வாக அதிகாரம் லலித் வீரதுங்க வசம் இருந்தமை குறிப்பிடத்தக்கது.
அத்துடன், ஜனாதிபதி செயலகத்தின் வாகனங்களை, அனுமதியின்றிப் பயன்படுத்தினார் என்ற குற்றச்சாட்டு தொடர்பில் விசாரிப்பதற்காக, தேசிய சுதந்திர முன்னணியின் ஏற்பாட்டாளரும் நாடாளுமன்ற உறுப்பினருமான ஜயந்த சமரவீரவும், மேற்படி பொலிஸ் நிதிக் குற்றப்புலனாய்வுப் பிரிவுக்கு இன்று (31) அழைக்கப்பட்டுள்ளார்.
 இதேவேளை அவன்கார்ட் நிறுவனத்தின் முக்கியஸ்தரான ஓய்வுபெற்ற மேஜர் நிஸ்ஸங்க சேனாதிபதியும், இன்றைய தினத்திலேயே, பொலிஸ் நிதிக் குற்றப்புலனாய்வுப் பிரிவுக்கு அழைக்கப்பட்டுள்ளார்.

, ஹம்பாந்தோட்டை துறைமுகத்தில் நடைபெற்ற உற்சவமொன்றின் போது நடத்தப்பட்ட கலை நிகழ்ச்சியின் போது, நிதி மோசடி செய்யப்பட்டுள்ளதாக குற்றச்சாட்டு தொடர்பில் விசாரணை செய்வதற்காக பிரபல பாடகரும் மேரியன்ஸ் இசைக்குழுவின் தலைவருமான நலின் பெரேரா, பாரிய நிதி மோசடிகள் தொடர்பில் விசாரணை நடத்திவரும் ஜனாதிபதி ஆணைக்குழுவுக்கு இன்று (31) அழைக்கப்பட்டுள்ளார் என்பதும் குறிப்பிடத்தக்கது

No comments:

Post a Comment