Tuesday, May 31, 2016

இராஜகிரிய பகுதியில் இடம்பெற்ற வாகன விபத்து தொடர்பில் கைது செய்த வேகத்திலேயே பிணையில் சென்றுள்ள விஜித ஹேரத்

இராஜகிரிய பகுதியில் இடம்பெற்ற வாகன விபத்து தொடர்பில்

கைது செய்த வேகத்திலேயே பிணையில் சென்றுள்ள விஜித ஹேரத்




மக்கள் விடுதலை முன்னணியின் பிரச்சார செயலாளரான விஜித ஹேரத் கைது செய்யப்பட்டு பின்னர் பிணையில் சென்றுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
நேற்று இரவு இராஜகிரிய பகுதியில் இடம்பெற்ற வாகன விபத்து தொடர்பில் சந்தேகத்தின் பேரிலேயே இவரை வெளிக்கடை பொலிஸார் கைது செய்துள்ளதாகக் கூறப்படுகின்றது.
குறித்த விபத்தின் போது நாடாளுமன்ற உறுப்பினர் குடிபோதையில் இருந்தமை உறுதியாகியுள்ளதாகவும், மேலும் இவர் மீது மூன்று குற்றச்சாட்டுக்கள் சுமத்தப்பட்டிருப்பதாகவும் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
தொலைபேசி தூண் ஒன்றில் இவரது வானகம் மோதுண்டதாகவும், இதற்கான செலவைதான் ஏற்றுக்கொள்வதாகவும்விஜித ஹேரத் தெரிவித்துள்ளார் என்றும்  தெரிவிக்கப்படுகின்றது.

இவரை புதுக்கடை நீதிமன்றில் நாளை ஆஜராகுமாறும் உத்தரவிடப்பட்டுள்ளதாகவும் தெரிய வந்துள்ளது.

No comments:

Post a Comment