Wednesday, June 1, 2016

பிணையில் இருந்த விஜித ஹேரத் இன்று விடுதலை

பிணையில் இருந்த விஜித ஹேரத்
இன்று விடுதலை


இராஜகிரிய பகுதியில் இடம்பெற்ற வாகன விபத்து ஒன்று தொடர்பாக கைது செய்யப்பட்டு பிணையில் செல்ல அனுமதிக்கப்பட்ட ஜே.வி.பியின் பிரச்சாரச் செயலாளரும் நாடாளுமன்ற உறுப்பினருமான விஜித ஹேரத் கொழும்பு பிரதான நீதவானால் இன்று விடுதலை செய்யப்பட்டுள்ளார்.
இவர் மீது தொடுக்கப்பட்ட 2 குற்றச் சாட்டுக்களுக்கும் 1,500 ரூபாவை செலுத்துமாறு நீதவானால் உத்தரவிடப்பட்டது.
நேற்று முன்தினம் 30 ஆம் திகதி இரவு இராஜகிரிய சந்தியில், விஜித ஹேரத்தின் வாகனம் வீதியோரத்தில் இருந்த தொலைபேசி தூணில் மோதியிருந்தமை குறிப்பிடத்தக்கது.

இதேவேளை வாகனத்தை செலுத்திக் கொண்டிருந்த போது அவருக்கு நித்திரை ஏற்பட்டமை காரணமாகவே இந்த அனர்த்தம் இடம்பெற்றதாக விசாரணையில் இருந்து தெரியவந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

No comments:

Post a Comment