Tuesday, August 2, 2016

பாகிஸ்தானில் பஸ் - டிரக் மோதி விபத்து 12 பேர்உயிரிழப்பு 25 ற்கும் மேற்பட்டோர் படுகாயம்

பாகிஸ்தானில் பஸ் - டிரக் மோதி விபத்து
12 பேர்உயிரிழப்பு 25 ற்கும் மேற்பட்டோர் படுகாயம்

பாகிஸ்தானில் பஸ்-டிரக் மோதிக்கொண்ட விபத்தில் 12 பேர் பலியானார்கள் 25 ற்கும் மேற்பட்டோர் படுகாயமடைந்தனர்.
பாகிஸ்தானில் 50 பயணிகளுடன் கராச்சியை நோக்கி சென்ற பயணிகள் பஸ் டிரக் மீது மோதி விபத்துக்குள்ளானது. இதில் பஸ்ஸில் பயணம் செய்த 12 பேர் உயிரிழந்தனர். 25 ற்கும் மேற்பட்டோர் படுகாயமடைந்துள்ளனர். அவர்கள் அனைவரும் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

காயமடைந்தவர்களில் பலரது நிலைமை மோசமாக உள்ளதால் பலி எண்ணிக்கை மேலும் உயரக்கூடும் என்று அஞ்சப்படுகின்றது.


No comments:

Post a Comment